ரஜினி பற்றி எல்லாம் தெரிந்தும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு ரஞ்சித் அடம்

Bookmark and Share

ரஜினி பற்றி எல்லாம் தெரிந்தும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு ரஞ்சித் அடம்

சென்னை: ரஜினியின் புகழ் பற்றி தெரிந்தும் பா. ரஞ்சித் ஒரு விஷயத்தில் அடம்பிடித்துள்ளார். கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு படத்திற்காக ஒன்று சேர்ந்துள்ளனர். மும்பை பின்னணியை கொண்ட கற்பனை கதை இது.

முன்னதாக ஹாஜி மஸ்தான் கதை என்று கூறப்பட்டதால் அவரின் வளர்ப்பு மகன் ரஜினிக்கு மிரட்டல் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.மும்பை பின்னணி சரி, ஆனால் ரஜினி அங்கு சென்றால் அவரை அனைவருக்கும் அடையாளம் தெரியும். கூட்டம் கூடிவிடும், அவர்களை சமாளிப்பது கடினம்.

அதனால் செட் போட்டு எடுக்கலாமே என்று ரஞ்சித்திடம் கூறப்பட்டதாம்.செட் எல்லாம் வேண்டாம், எனக்கு மும்பைக்கே போய் தான் படம் எடுக்க வேண்டும் என்று ரஞ்சித் அடம்பிடித்தாராம். இதையடுத்து செட் போடும் ஐடியா கைவிடப்பட்டதாம்.

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் தான் ரஜினி படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. அது தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடமும் கூட.படப்பிடிப்புக்காக ரஞ்சித் மற்றும் படக்குழு நேற்று முன்தினமே மும்பை சென்றுவிட்டதாம்.

ரஜினி வரும் 28ம் தேதி படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அவர் 3 வாரங்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு சென்னை திரும்புவாராம்.


Post your comment





Related News
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
இனி தளபதி விஜய்க்கு நடனத்தில் நான் தான் போட்டி - பிரபல காமெடி நடிகர் ஓபன் டாக்.!
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
அடுத்த மாதம் தல, தளபதி ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது விசிறி
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்
மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா? ரகசிய தகவல் லீக்
மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.!
முதல் நாள் உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா Agnyaathavaasi- ஆல் டைம் நம்பர் 4
பிரபல நடிகையின் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை இயக்குனர் - புகைப்படம் உள்ளே.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions