இளையராஜா இசையில் பாடல் எழுதிய பா.விஜய்

Bookmark and Share

இளையராஜா இசையில் பாடல் எழுதிய பா.விஜய்

இளையராஜா இசையில் இதுவரை எண்ணற்ற கவிஞர்களும், பாடலாசிரியர்களும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். கண்ணதாசன், வாலி, வைரமுத்து, முத்துலிங்கம், புலமைப்பித்தன், நா.காமராசன், மு.மேத்தா, பழனிபாரதி, நா.முத்துக்குமார், சினேகன் உள்ளிட்ட பலர் அவருடைய இசையில் பல ஹிட் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

ஆனால், தேசிய விருது பெற்ற பாடலாசிரியரான பா.விஜய் இதுவரை இளையராஜா இசையில் ஒரு பாடலைக் கூட எழுதியதில்லை. பாக்யராஜால் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்ட பா.விஜய், பல ஹிட்டான பாடல்களை எழுதியிருக்கிறார்.

2005ம் ஆண்டு வெளிவந்த 'ஆட்டோகிராப்' படத்திற்காக எழுதிய 'ஒவ்வொரு பூக்களுமே...' பாடலுக்காக தேசிய விருதையும் பெற்றார். ஏ.ஆர்.ரகுமான், யுவன்ஷங்கர் ராஜா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், பரத்வாஜ், உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை எழுதியிருந்தாலும் இளையராஜா இசையில் இதுவரை ஒரு படத்தில் கூட அவர் பாடலை எழுதவில்லை.

அந்த ஆசை இப்போது விஜய்க்கு நிறைவேறிவிட்டது. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள 'ருத்ரமாதேவி' படத்திற்காக இளையராஜா இசையில் பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய்.

பாடல் பதிவின் போது இளையராஜாவுடன் இருந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது. 


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
பார்த்திபன் - சீதா மகள் அபிநயாவுக்கு திருமணம் - எம்.ஆர்.ராதா கொள்ளு பேரனை மணக்கிறார்
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions