ஒரே நேரத்தில் பா.விஜய்யின் 2 படங்கள் திரைக்கு வருகிறதாம்!

Bookmark and Share

ஒரே நேரத்தில் பா.விஜய்யின் 2 படங்கள் திரைக்கு வருகிறதாம்!

ஞாபகங்கள், இளைஞன் படங்களுக்குப் பிறகு பா.விஜய் நடித்த படம் தகடு தகடு. இந்த தலைப்பைதான் பின்னர் 30 ரூபாய் சிடி என்று மாற்றினர்.

ஆனால், எப்போதோ படப்பிடிப்பு முடிந்த அந்த படம் இன்னமும் ரிலீசாகவில்லை. அதனால் அதற்கடுத்து ஸ்ட்ராபெர்ரி என்றொரு படத்திற்கான கதையை எழுதி தானே இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறார் பா.விஜய்.

இப்படி திடுதிப்பென்று அவர் இயக்குனரானதற்கு காரணம், தனுஷ் நடித்த திருடா திருடி, சுந்தர்.சியின் தலைநகரம் மற்றும் ருத்ரமாதேவி ஆகிய படங்களுக்கு அவர் டயலாக் எழுதியிருக்கிறார். அந்த அனுபவத்தைக் கொண்டுதான் தனக்கான ஸ்கிரிப்ட்டை தானே ரெடி பண்ணி இயக்குனர் அவதாரமெடுத்து விட்டார் பா.விஜய்.

அதேசமயம், வழக்கமாக இல்லாமல் ஒரு வித்தியாசமான கதையை கையிலெடுத்திருக்கிறாராம் அவர்.

இதற்கு முன்பு அவர் நடித்த படங்களின் கதை மனதில் ஒட்டாதபோதும் இந்த ஸ்ட்ராபெர்ரி படத்தின் கதை ரசிக உள்ளங்களில் ஒட்டிக்கொள்ளுமாம்.

அந்த அளவுக்கு உணர்வுரீதியான ஒரு கதையில் நடிப்பதாக கூறும் பா.விஜய், இந்த ஸ்ட்ராபெர்ரி படம் ரிலீசாகும்போது 30 ரூபாய் சிடி படத்தையும் வெளியிட்டு விடவேண்டும் என்று அதற்கான வேலைகளிலும் இறங்கியிருக்கிறாராம்.

மேலும், 30 ரூபாய் சிடி படத்தை தயாரித்துள்ள நிறுவனம்தான் தற்போது பா.விஜய் இயக்கி நடித்து வரும் ஸ்ட்ராபெர்ரி படத்தையும் தயாரிக்கிறதாம்.


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
பார்த்திபன் - சீதா மகள் அபிநயாவுக்கு திருமணம் - எம்.ஆர்.ராதா கொள்ளு பேரனை மணக்கிறார்
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions