பா.விஜய் படத்தை திரும்பத்திரும்ப ஷோ காட்டுகிறார்கள்!

Bookmark and Share

பா.விஜய் படத்தை திரும்பத்திரும்ப ஷோ காட்டுகிறார்கள்!

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே -என்ற பாடலை ஆட்டோகிராப் படத்துக்காக எழுதி தேசிய விருது பெற்றவர் பா.விஜய். கோலிவுட்டின் வித்தகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டு வரும் அவர், ஞாபகங்கள், இளைஞன் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே ஓடவில்லை.

இருப்பினும், ஹீரோவாக நடிப்பதை அவர் விடவில்லை. அதையடுத்து தகடு தகடு என்றொரு படத்திலும் நடித்தார். ஆனால் அந்த படம் எப்போதோ முடிந்து வியாபாரத்துக்கு வந்தபோதும், இன்னமும் விலைபோகவில்லை.

அதனால் தொடர்ந்து விநியோகஸ்தர்களுக்கு ஷோ போட்டு காண்பித்துக்கொண்டேயிருக்கிறார்கள்.  இந்தநிலையில், ஆரம்பத்தில் தகடு தகடு படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த பா.விஜய் இப்போது வியாபாரம் ஆகாமல் இருப்பதால் இந்த படத்தை நம்பிக்கொண்டிருக்க வேண்டாம் என்று ஒரு படத்தை தானே இயக்கி நடித்துக்கொண்டிருக்கிறாராம்.

ஆனால், இப்போதைக்கு அந்த விசயம் வெளியில் தெரிய வேண்டாம் என்பதால் எந்த செய்தியையும் வெளியிடாமல் சீக்ரெட்டாக படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறாராம் அவர்.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions