மீண்டும் பாடல்கள் எழுத தொடங்கிவிட்டேன்- பா.விஜய்

Bookmark and Share

மீண்டும் பாடல்கள் எழுத தொடங்கிவிட்டேன்- பா.விஜய்

தமிழ் திரை உலகில் முக்கிய கவிஞராக இடம் பிடித்தவர் பா.விஜய். ஏராளமான திரைப்படங்களுக்கு பாடல் எழுதினார். ‘ஆட்டோகிராப்’ படத்திற்காக எழுதிய ‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே’ என்ற பாடல் தேசிய விருதை பெற்றார் பா.விஜய்.

இந்த நிலையில் ஞாபகங்கள், இளைஞன் என்று திரைப்படங்களில் நடித்தால், பாடல் எழுதுவதை குறைக்கும் நிலை ஏற்பட்டது. இவருக்கு வர வேண்டிய வாய்ப்பு வேறு கவிஞர்களுக்கு சென்றது. சமீபத்தில் இவர் இயக்கி நடித்து தயாரித்த ‘ஸ்ட்ராபெரி’ படம் திரைக்கு வந்தது.

சமீபத்தில் இது குறித்து அவர் கூறுகயில்,“ நான் திரைப்பட பாடல் ஆசிரியராகத்தான் வந்தேன். நான் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியதால் பாடல் எழுதும் வாய்ப்புகள் குறைந்தன. என்றாலும் தற்போது மீண்டும் நிறைய பாடல்கள் எழுதுகிறேன். 

பாடல் எழுதுவதற்கு இடையூறு ஏற்படாத வகையில் நடித்து வருகிறேன். மற்றபடி பாடல் எழுத மாட்டேன் என்று நான் இதுவரை யாரிடமும் கூறியது இல்லை.

நான் இயக்கி நடித்த ‘ஸ்ட்ராபெரி’ படம் வெற்றி பெற்றது. இப்போது ‘நையப்புடை’ படத்தில் நடிக்கிறேன்.

இது ஒரு அதிரடிப்படம் இதில் எனது இன்னொரு முகத்தை வெளிப்படுத்தி வருகிறேன். என்றாலும் திரைப்படங்களுக்கு பாடல் எழுதிவதற்கு போதுமான நேரத்தை ஒதுக்கி வருகிறேன். தொடர்ந்து நிறைய பாடல்கள் எழுதுவேன்” என்றார்.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions