பெற்றோர்கள் கனவை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும்: பாடலாசிரியர் பா.விஜய்

Bookmark and Share

பெற்றோர்கள் கனவை மாணவர்கள் நிறைவேற்ற வேண்டும்: பாடலாசிரியர் பா.விஜய்

திருவண்ணாமலை அருணை என்ஜினீயரிங் கல்லூரியில், பிளஸ்-2 மாணவ- மாணவிகளுக்கான படிக்கற்கள் என்னும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ஜி.மோகன்குமார் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக சினிமா பாடலாசிரியர் பா.விஜய் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து அக்னி பரீட்சை என்னும் தலைப்பில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- 

நாம் எண்ணும் எண்ணம்தான் நம்மை வெற்றி பெறச்செய்யும். தேர்வின்போது எதை சுலபமாக கருதுகிறாயோ அதை முதலில் படிக்க வேண்டும். கடினமானதை இரண்டாவதாக படிக்க வேண்டும்.

அதில் சுலபமானதை முதலில் படிக்க வேண்டும். விழுந்து விழுந்து படிக்காமல் புரிந்து படிக்க வேண்டும். தேர்வின்போது வினாத்தாள் வாங்கியதும் அதை முழுமையாக படித்து பார்க்க வேண்டும், பதற்றம் இன்றி தேர்வு எழுத வேண்டும்.

எதிர்பார்த்த கேள்வி வரவில்லை என்றால் தெரிந்ததை முதலில் எழுதவேண்டும். தேர்வின் போது படிப்பு படிப்பு என்றில்லாமல் ஒரு மணி நேரமாவது விளையாட வேண்டும். அதுதான் மூளையை புதுப்பிக்கும். சினிமா பார்க்காதீர்கள்.

பெற்றோர்கள் நமக்கான கனவை சுமக்கிறார்கள். அதை நிறைவேற்ற இலக்கை நோக்கி நகர வேண்டும். 
இவ்வாறு அவர் பேசினார். 

பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாடலாசிரியர் பா.விஜய் நினைவு பரிசு வழங்கினார். 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions