இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடிக்கிறார் பா.விஜய்

Bookmark and Share

இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடிக்கிறார் பா.விஜய்

பாடலாசிரியராக திரைத்துறைக்குள் அடியெடுத்து வைத்த பா.விஜய் தமிழ் சினிமாவில் தனக்கான ஒரு இடைத்தை பிடித்தார். இன்றைய உயரத்தைவிட மேலும் உயரத்துக்குச் செல்ல வேண்டியவர்.

திடீரென அவருக்கு ஹீரோ ஆசை வந்தது. தாய் காவியம் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் பா.விஜய். அந்தப் படம் பாதியோடு ட்ராப்பாகி விட்டது. அதன் பிறகு 'ஞாபகங்கள்', 'இளைஞன்' ஆகிய படங்களில் நடித்தார்.

இந்தப் படங்கள் மூலம் சினிமாவில் தன்னை ஒரு நடிகராகவும் அடையாளம் காட்டிக்கொண்டாலும் இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்த படங்களின் தோல்வியைத் தொடர்ந்து நடிகராக பா.விஜய்யின் எதிர்காலம் சொல்லிக் கொள்ளும்படி அமையவில்லை.

பின்னர், 'தகடு தகடு' என்ற படத்தில் நடித்திருக்கிறார் பா.விஜய்.  இந்தப்படத்தை அடுத்து  'வில் மேக்கர்ஸ்' என்ற பெயரில் புதிய பட நிறுவனம் ஒன்றை துவங்கி பா.விஜய்யே இயக்கி, தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடிக்க இருக்கிறார்.

பாடலாசிரியராக படத்துறைக்கு வந்தவர் நடிகராகி இப்போது தயாரிப்பாளர், இயக்குனர் என்ற துறைகளையும் கையில் எடுத்திருக்கிறார். வெற்றி கிடைக்குமா?


Post your comment





Related News
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
ஏப்ரலில் அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ்
பார்த்திபன் - சீதா மகள் அபிநயாவுக்கு திருமணம் - எம்.ஆர்.ராதா கொள்ளு பேரனை மணக்கிறார்
நந்தாவும், ரமணாவும் என்னை அவமானப்படுத்தினார்கள் - பார்த்திபன் பரபரப்பு பேட்டி
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் சேதுபதிக்கு சுருதிஹாசன் ஜோடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions