பாம்பு சட்டை படப்பிடிப்பு இன்று துவங்கியது

Bookmark and Share

பாம்பு சட்டை  படப்பிடிப்பு இன்று துவங்கியது

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்கியது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி S தாணு மற்றும் பொருளாளர் ‘Fivestar’ கதிரேசன், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், ரெயான் ராதிகா ஆகியோர் பங்கேற்று பாம்பு சட்டை குழுவினரை வாழ்த்தினர்.

பாபி சிம்ஹா, ராஜேந்திரன் நடித்த முதல் ஷாட்டை Clap அடித்து துவங்கி வைத்தார் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார். நாயகன் பாபி சிம்ஹாவின் ஹேர் ஸ்டைலை மேலும் அழகு படுத்தும் விதமாக சில விஷயங்களை கூறியது இப்படத்தில் அவரது ஈடுபாடை குறிக்கும் வண்ணம் அமைந்தது.

R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

“படத்தின் முதல் கட்ட படப்பதிவு இன்று முதல் தொடங்கவுள்ளது. என்னை இயக்குனராக அறிமுகபடுத்தும் தயாரிப்பளர்களுக்கும். எனது குரு இயக்குனர் சங்கர் சார் அவர்களுக்கும் எனது நன்றிகள்.” என கூறினார் இயக்குனர் ஆடம் தாசன். 


Post your comment





Related News
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!
பாம்பு சட்டை படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!
பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு
பாம்பு சட்டை படப்பிடிப்பு 5 நாள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது!
பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!
சாட்டை அன்பழகன் படத்தில் கயல் சந்திரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions