பாம்பு சட்டை படப்பிடிப்பு 5 நாள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது!

Bookmark and Share

பாம்பு சட்டை படப்பிடிப்பு 5 நாள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது!

நட்டி என்கிற நடராஜ் நாயகனாக நடித்த படம் சதுரங்க வேட்டை. இந்த படத்தை தயாரித்தவர் இயக்குனரும் நடிகருமான மனோபாலா. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் உடனடியாக பாம்பு சட்டை என்ற படத்தை பாபி சிம்ஹாவை நாயகனாக வைத்து தயாரித்து வருகிறார்.

இந்த படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தில் கமிட்டானபோது எப்படி பாபி சிம்ஹா பல படங்களில் ஒப்பந்தமானாரோ அதேபோல் கீர்த்தி சுரேசும் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் கமிட்டானார்.

அதனால், முதல்கட்ட படப்பிடிப்பு அதிக நாட்கள் நடத்தியவர்கள் பின்னர் துண்டுதுண்டாக நடத்தி வந்தனர். அந்த வகையில், தற்போது பாம்பு சட்டை படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது.

இன்னும் 5 நாட்கள் மட்டுமே பேலன்ஸ் உள்ளதாம். மேலும், படத்தை ஜூலையில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதால், தற்போது இறுதிகட்ட பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். தான் ஷோலோ ஹீரோவாக நடித்து வெளியாகும் முதல் படம் இது என்பதால், இப்படத்தை அதிகமாக எதிர்பார்க்கிறாராம் பாபி சிம்ஹா.


Post your comment





Related News
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!
பாம்பு சட்டை படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!
பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு
பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!
சாட்டை அன்பழகன் படத்தில் கயல் சந்திரன்!
காக்கி சட்டை படத்தின் வெற்றி குறித்து லாஜிக்கான சந்தேகம்...








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions