பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு

Bookmark and Share

பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் புதுமுக இயக்குனர் ஆடம்தாசன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பாம்பு சட்டை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இப்படத்தில் தாமிரபரணி பானு, சார்லி, நான் கடவுள் ராஜேந்திரன், ஆர்.வி உதயகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து இயக்குனர் ஆடம்தாசன் கூறும்போது, ‘பாம்பு சட்டை’ படத்தின் அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி முடிந்துவிட்டது. இவ்வளவு குறுகிய காலத்தில் முடிப்பதற்கு உதவியாய் இருந்த அனைத்து கலைஞர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் மனமார்த்த நன்றி. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது. விரைவில் பர்ஸ்ட் லுக் சீறி வரும் என்று கூறினார்.

இப்படத்தை ஆர்.சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் ஆகியோர் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும், இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரித்துள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது, இப்படத்தின் சில புகைப்படங்களையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.


Post your comment





Related News
பாபி சிம்ஹா ஜோடியான ரம்யா நம்பீசன்
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
பாபி சிம்ஹா படத்தில் இணைந்த விஷால்!
பாபி சிம்ஹாவுக்கு வில்லனான பிரசன்னா!
திருட்டு பயலே இரண்டாம் பாகத்தில் இணையும் பாபி சிம்ஹா – பிரசன்னா!
அஜித் பாணியில் பாபி சிம்ஹா!
மெட்ரோ தெலுங்கில் ரீமேக்கில் நடிக்கும் பிரபல நடிகர்?
ஹிந்திக்கு செல்லும் தமிழின் சமீபத்திய மெகாஹிட் படம்!
உற்சாகத்தில் மிதக்கும் மெட்ரோ படக்குழுவினர் !
கோ 2 வசூல் விவரம் வெளியானது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions