பழைய தலைப்புகளில் நாளை 3 படங்கள் ரிலீஸ்...!

Bookmark and Share

பழைய தலைப்புகளில் நாளை 3 படங்கள் ரிலீஸ்...!

பழைய படங்களின் தலைப்பை மீண்டும் புதிய படங்களுக்கு வைப்பததால் தமிழ் சினிமாவில் படைப்பாக்கம் வரவரக் குறைந்து விட்டது என்றே கூறலாம்.

இதற்கு இயக்குனர்கள் கதைக்கு மிகவும் பொருத்தமாக அமைவதால் இது போன்ற தலைப்பு வைக்கிறோம் என்று காரணத்தையும் சொல்கிறார்கள். மிஞ்சிப் போனால் ஒரே ஒரு வார்த்தை அல்லது இரண்டு வார்த்தை, அதற்கு மேல் எல்லாம் நீளமாக யாரும் டைட்டிலை வைப்பதில்லை. 

ஒரு தமிழ்ப் பெயரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கே அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை. மேலும் நாளை செப்டம்பர் 4ம் தேதி வெளியாக உள்ள மூன்று படங்களின் தலைப்பும் பழைய படங்களின் தலைப்புதான்.. 

ரஜினிகாந்த், ராதா நடித்து 1983ம் ஆண்டு வெளிவந்த பாயும் புலி தலைப்பை சுசீந்திரன் இயக்கதில் விஷால், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள படத்திற்கு வைத்துள்ளனர். இப்ப்டம் நாளை ரிலீஸாகவுள்ளது. 

அசோக் செல்வன், பிந்து மாதவி நடித்து நாளை வெளிவர உள்ள சவாலே சமாளி என்ற பெயரில் சிவாஜிகணேசன், ஜெயலலிதா நடித்து 1971ம் ஆண்டு வெளிவந்தது.

நடன இயக்குனர் ஸ்ரீதர், ஸ்பூர்த்தி நடித்து நாளை வெளிவர உள்ள போக்கிரி மன்னன் படப் பெயரில் இரண்டு பழைய படங்களின் தலைப்பு அடங்கியுள்ளது. விஜய், அசின் நடிக்க போக்கிரி படம் 2007ம் ஆண்டு வெளிவந்தது. ரஜினிகாந்த், விஜயசாந்தி, குஷ்பு நடிக்க மன்னன் படம் 1992ம் ஆண்டு வெளிவந்தது. 

தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள போக்கிரி ராஜா படப் பெயரில் ஜீவா, ஹன்சிகா நடிக்கும் புதிய படம் ஒன்று ஆரம்பமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இன்னும் எத்தனை ரஜினி படப் பெயர்களுக்கு ஹீரோக்கள் ஆசைப்படபோகிறார்களோ?...


Post your comment





Related News
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions