பாயும்புலி நாளை ரிலீஸாகுமா? பரபரப்பு தொடருகிறது

Bookmark and Share

பாயும்புலி நாளை ரிலீஸாகுமா? பரபரப்பு தொடருகிறது

விஷால் நடித்த பாயும்புலி படத்துக்கு செங்கல்பட்டு திரையரங்க விநியோகஸ்தர்கள் சங்கம் தடை விதித்தது.

அந்தத்தடை காரணமாக, தயாரிப்பாளர்கள் சங்கம் நாளை முதல் 11 ஆம் தேதி முதல் புதியபடங்களைத் திரையிடுவதில்லை என்று செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவுசெய்து அறிக்கை வெளியிட்டார்கள்.

அந்த அறிக்கை வந்த சில மணிநேரங்களில் விஷால், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், திட்டமிட்டபடி செப்டம்பர் 4 ஆம் தேதி பாயும்புலி படம் வெளியாகும் என்று டுவிட் செய்தார்.

அதில் “ஏன் இப்படி? செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் தானே படத்துக்குத் தடை விதித்தார்கள், மற்ற மாவட்டங்களில் நாங்கள் திரையரங்குகளை ஒப்பந்தம் செய்து காத்திருக்கிறோம் எங்களை ஏமாற்றலாமா?” என்று தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கேட்கத் தொடங்கியதால் விஷால் இப்படி அறிவித்ததாகச் சொல்லப்படுகிறது. 

தயாரிப்பாளர்கள் சங்கமும் இதையொட்டிய அறிவிப்பை வெளியிடும் என்றும் தெரிகிறது. இதற்கிடையே செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கக்கூட்டம் இன்று நடக்கவிருக்கிறது. அதில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது மதியம் தெரியும்.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions