பாயும்புலி படத்துக்கு பேச்சுவார்த்தை

Bookmark and Share

பாயும்புலி படத்துக்கு பேச்சுவார்த்தை

வேந்தர் மூவீஸ் தயாரிக்கும்  விஷால், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளபடம் ‘பாயும் புலி.  சுசீந்திரன் டைரக்டு செய்துள்ளார்.  இதன் படப்பிடிப்பு முடிந்து  திரைக்கு செப்டம்பர் 4-ந்தேதி வெளியிட திட்டமிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், ‘பாயும் புலி’ படத்துக்கு தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் திடீர் தடைவிதித்துள்ளது. கோவை, மதுரை, சேலம் சென்னை போன்ற பகுதிகளில் படத்தை வெளியிடுவதற்கு தடையில்லை.

 ‘லிங்கா’ படத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இன்னும் ஈடுகட்டாததால் செங்கல்பட்டு, வடஆற்காடு, தென்ஆற்காடு, திருச்சி போன்ற பகுதியில் மட்டும் திரையிடுவது இல்லை முடிவு செய்துள்ளனர்.  

இதற்கு தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தனிநபர் வியாபார உரிமையை முடக்கும் செயல் என்றும் கண்டித்துள்ளது. தடையை நீக்காவிட்டால் தமிழக அரசின் கவனத்துக்கு இந்த பிரச்சினை கொண்டுசெல்லப்படும் என்றும் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், ‘பாயும் புலி’ படத்தை திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடக்கின்றன.  

சென்னையில் நேற்று மாலை இரு சங்கங்கள் இடையே  சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறும் என்றும், இதில் சுமூக தீர்வு ஏற்படும் என்றும் திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். 


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions