பாயும் புலி தலைப்புக்கு ஏவிஎம் அனுமதி கொடுத்ததா?!

Bookmark and Share

பாயும் புலி தலைப்புக்கு ஏவிஎம் அனுமதி கொடுத்ததா?!

படத்தின் கதையை யோசிக்க திணறுகிறார்களோ இல்லையோ... படத்துக்கு என்ன தலைப்பு சூட்டுவது என்று திணறுகிறார்கள் இயக்குநர்கள். வேந்தர் மூவீஸ் நிறுவனம் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் விஷால், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் புதிய படத்திற்கு முதலில் வேட்டை மன்னன், காவல் கோட்டம் ஆகிய தலைப்புகள் அடிபட்டன.

இந்தப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் விஷால். எனவே மேற்கண்ட தலைப்புகளை வைக்க எண்ணினார்கள். இவ்விரு தலைப்புகளும் வேறு ஆட்கள் சொந்தம் கொண்டாடியதால் வேறு தலைப்பை தேடி வந்தனர்.

இந்நிலையில் 'பாயும் புலி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.  விஷாலின் போலீஸ் கேரக்டருக்கு 'பாயும் புலி' என்ற டைட்டில் மிக பொருத்தமாக இருக்கும் என்பதால் இதை தேர்வு செய்துள்ளனர்.

விஷால் நடிப்பில் வெளியான 'நான் சிகப்பு மனிதன்' படமும் ஏற்கெனவே ரஜினிகாந்த் நடித்த பட டைட்டில் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் மீண்டும் ரஜினி நடித்த ஒரு படத்தின் டைட்டிலை விஷால் படத்திற்கு சூட்டியுள்ளனர்.

இதில் முக்கிய விஷயம் என்வென்றால்.... பாயும் புலி என்ற தலைப்பு ஏவிஎம் நிறுவனத்துக்கு சொந்தமானது. இதுவரை ஏவிஎம் நிறுவனத்திடம் பாயும் புலி தலைப்பை பயன்படுத்திக்கொள்ள விஷால் தரப்பு அனுமதி கேட்கவில்லையாம்.


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
தனுஷ் - கவுதம் மேனன் படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது
எனை நோக்கி பாயும் தோட்டா மிஸ்டர் எக்ஸ் இவர் தானா?
எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி இதோ- ரசிகர்கள் உற்சாகம்
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
இசையமைப்பாளர் மட்டுமில்லை, ENPT படத்தில் இந்த டெக்னிஷியனும் இன்னும் முடிவாகவில்லையா?
எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்?
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இந்த இளம் நடிகர் தான்
என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு 'கிறிஸ்துமஸ்' விருந்தளித்த தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions