பாயும் புலியுடன் ஜோடி சேரும் ரஜினிமுருகன்!

Bookmark and Share

பாயும் புலியுடன் ஜோடி சேரும் ரஜினிமுருகன்!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘பாயும் புலி’ படம் வருகிற செப்டம்பர் 4ம் தேதி உலகெங்கும் வெளியாக இருக்கிறது. இதில் விஷாலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருக்கிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இதில் விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ‘பாயும் புலி’ வெளியாகும் திரையரங்குகளில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரஜினி முருகன்’ படத்தின் டிரைலரை வெளியிட இருக்கிறார்கள்.

இது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர். மேலும் யூடியூப்பில் ‘ரஜினி முருகன்’ டிரைலரை செப்டம்பர் 3ம் தேதி நள்ளிரவு வெளியிட இருக்கின்றனர்.

‘ரஜினி முருகன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் சூரி, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்ட கூத்தன் அறிமுக பாடல்.
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
ராஜூமுருகன் - ஜீவா - இணையும் ஜிப்ஸி
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
இந்தியிலும் கலக்கும் இருமுகன்
தமிழில் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் மோகன்லாலின் ‘புலிமுருகன்’








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions