பாயும்புலி விவகாரம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கமிஷனரிடம் புகார்

Bookmark and Share

பாயும்புலி விவகாரம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கமிஷனரிடம் புகார்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு, துணை தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், செயலாளர்கள் டி.சிவா, ராதாகிருஷ்ணன் மற்றும் தயாரிப்பாளர்கள் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், வேந்தர் மூவிஸ் மதன், கே.எஸ்.சீனிவாசன் உள்ளிட்டவர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தனர்.கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தனர். 

பின்னர் வேந்தர் மூவிஸ் மதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:- 

நடிகர் விஷால் நடித்த ‘பாயும்புலி’ படம் வருகிற 4-ந் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட உள்ளது. இந்த நிலையில், திருச்சி பகுதி சினிமா வினியோகஸ்தர் சிங்காரவேலன், ‘பாயும்புலி’ படத்தை திரையிட விடமாட்டேன் என்று மிரட்டி வருகிறார். தியேட்டர் அதிபர்களையும் மிரட்டி உள்ளார். ரூ.50 லட்சம் பணம் கேட்கிறார். 

பணத்தை கொடுக்காவிட்டால், படத்தை திரையிட விடமாட்டேன் என்று சொல்கிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ‘பாயும் புலி’ படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும், கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளோம்.

உடனே உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் ஜார்ஜ் உறுதி அளித்துள்ளார். 


Post your comment





Related News
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
தனுஷ் - கவுதம் மேனன் படத்தின் சஸ்பென்ஸ் வெளியானது
எனை நோக்கி பாயும் தோட்டா மிஸ்டர் எக்ஸ் இவர் தானா?
எனை நோக்கி பாயும் தோட்டா ரிலிஸ் தேதி இதோ- ரசிகர்கள் உற்சாகம்
`எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் அடுத்த அப்டேட்
இசையமைப்பாளர் மட்டுமில்லை, ENPT படத்தில் இந்த டெக்னிஷியனும் இன்னும் முடிவாகவில்லையா?
எனை நோக்கி பாயும் தோட்டா இசையமைப்பாளர் இவர்கள் தான்?
எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இசையமைப்பாளர் இந்த இளம் நடிகர் தான்
என்னை நோக்கி பாயும் தோட்டா: ரசிகர்களுக்கு 'கிறிஸ்துமஸ்' விருந்தளித்த தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions