பத்மப்பிரியாவின் படவேட்டை!

Bookmark and Share

பத்மப்பிரியாவின் படவேட்டை!

மலையாள சினிமாவின் முக்கிய நடிகைகளில் பத்மப்பிரியாவும் ஒருவர். நான் ஹீரோயினியாக மட்டும்தான் நடிப்பேன் என்றில்லாமல் கேரக்டர்களுக்காக தன்னை மாற்றி நடித்து வந்தவர்.

தமிழில் தவமாய் தவமிருந்து படத்தில் தனது வித்தியாசமான பர்பாமென்ஸ் மூலம் ரசிகர்களை கொள்ளைகொண்ட பத்மப்பிரியா, பின்னர், மிருகம், பொக்கிஷம், சத்தம்போடாதே என பல படங்களில் நடித்தவர்.

அதையடுத்து படவாய்ப்பு இல்லாததால், அமெரிக்காவுக்கு படிக்கப்போகிறேன் என்று சென்ற பத்மப்பிரியா, அங்கு சென்ற இடத்தில் ஒருவரை காதலித்து காதும் காதும் வைத்த மாதிரி கல்யாணமும் செய்து கொண்டு மீண்டும் தாயகம் திரும்பியிருக்கிறார்.

ஆனால் இந்த விசயத்தை அவர் மூடி வைத்தபோதும், வெளியில் கசிந்து விட்டது. இதுபற்றி அவரிடம் கேட்பவர்களிடத்தில், இதெல்லாம் ஒரு விசயமே அல்ல. எல்லோரது வாழ்க்கையிலும் நடக்கிறதுதானே என்று கேசுவலாக சொல்லும் பத்மா, பிரம்மன், தங்க மீன்கள் படங்களைத் தொடர்நது வசந்த் இயக்கும் தண்ணீர் படத்திலும் 1980களில் உள்ள ஒரு கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும், திருமணத்துக்கு முன்பே நான் இமேஜ் பார்த்ததில்லை. இனிமேலா பார்க்கப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு சில டைரக்டர்களிடம் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்ற பெயரிலும் படவேட்டை நடத்தி வருகிறார் பத்மப்பிரியா.


Post your comment





Related News
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
ஜோத்பூர் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமணம்
பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் திருமண நிகழ்ச்சியில் திடீர் மாற்றம்
என் பெயரில் போலி பேஸ்புக், ட்விட்டர் - பிரியா பவானி சங்கர்
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
பிரியங்கா சோப்ராவுடன் நிச்சயதார்த்தம் - நிக் ஜோனஸின் முன்னாள் காதலி வருத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions