தமிழ் இயக்குனர்கள் என்னை புறக்கணிக்கிறார்கள் வருந்தும் பத்மபிரியா!

Bookmark and Share

தமிழ் இயக்குனர்கள் என்னை புறக்கணிக்கிறார்கள் வருந்தும் பத்மபிரியா!

‘மிருகம்’ படப்பிடிப்பில் இயக்குனர் சாமி கன்னத்தில் அறைந்ததாக பரபரப்பு புகார் கூறியவர் பத்மபிரியா. தற்போது மலையாள பட உலகிலும் மானேஜருக்கு சம்பளம் கேட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

இந்நிலையில் பத்மபிரியா அளித்த பேட்டி வருமாறு:-

நான் நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் தற்போது தமிழில் நீண்ட இடைவெளி விழுந்துள்ளது. தமிழில் எனக்கு படங்கள் இலலை. இயக்குனர்கள் யாரும் என்னை அணுகவில்லை. ஏன் ஒதுக்குகிறார்கள் என்ற காரணமும் தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். ஏற்கனவே ‘இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்’ படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளேன்.

மலையாள படங்கள் எனக்கு புகழை பெற்று தந்துள்ளன. என் மானேஜரை மலையாள பட உலகில் சர்ச்சையாக்கி உள்ளனர். எனக்கு மட்டும் அவர் மானேஜர் இல்லை. வேறு நடிகர்களிடம் அவர் பணியாற்றுகிறார்.

இந்த பிரச்சினை தற்போது சந்தேகத்தில் இருப்பதால் மேற்கொண்டு பேச விரும்பவில்லை. இயக்குனர் சாமி அடித்த விவகாரம் மற்றும் மானேஜர் பிரச்சினைகளால் என்னை சர்ச்சைக்குரியவராக பார்ப்பது சரியல்ல. நான் 45 படங்களில் நடித்துள்ளேன். இதற்கு காரணம் ரசிகர்கள்தான். நிறைய இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் என்னை பற்றி தெரியும். யாரிடமும் பிரச்சினை வைத்துக் கொண்டது இல்லை.

இவ்வாறு பத்மபிரியா கூறினார்.


Post your comment





Related News
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.!
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
8 தோட்டாக்கள் டீமின் அடுத்த படைப்பு ஜீவி
ஒரு வழியாக முடிவுக்கு வந்த தமிழ் சினிமா ஸ்ட்ரைக், ஆனால்? - முழு விவரம் உள்ளே.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions