பத்மாவதி படத்தை திரையிட சிறப்பு ஏற்பாடு! முதலமைச்சர் அறிவிப்பு

Bookmark and Share

பத்மாவதி படத்தை திரையிட சிறப்பு ஏற்பாடு! முதலமைச்சர் அறிவிப்பு

சித்தூர் பகுதியை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து பத்மாவதி என்ற படத்தை இயக்கியுள்ளார் சஞ்சய் லீலா பன்சாலி. இந்த படம் வரலாற்றை திரித்து எடுக்கப்பட்டுள்ளதாக பெரிய அளவில் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் பத்மாவதி படத்தை மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரையிட சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த படத்தை திரையிட அனுமதிக்கமாட்டோம் என ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions