இந்திய படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிக்க தடை: இந்திய தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்

Bookmark and Share

இந்திய படங்களில் பாகிஸ்தான் நடிகர்கள் நடிக்க தடை: இந்திய தயாரிப்பாளர் சங்கம் தீர்மானம்

பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் குண்டு வீசி அழித்தது. இதனால் எல்லையில் பதற்ற நிலைமை ஏற்பட்டு உள்ளது. இரு நாடுகளும் எல்லைப்பகுதியில் ராணுவத்தை குவித்து வருகின்றன. ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் எல்லையோரம் வசிக்கும் கிராம மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். பள்ளிகளும் மூடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்க திடீர் தடை விதித்துள்ளது. இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் மும்பையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததால் நிலவும் சூழ்நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே இயல்பு நிலைமை திரும்புவது வரை பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிப்பதற்கு தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஷாருக்கான் படத்திலும் கரன்ஷோகர் இயக்கும் படம் உள்பட மேலும் சில இந்தி படங்களிலும் பாகிஸ்தான் நடிகர்கள் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள். தொழில் நுட்ப கலைஞர்களாகவும் பணியாற்றுகிறார்கள்.

பாகிஸ்தானில் இருந்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களாக 50-க்கும் மேற்பட்டோர் இந்திய படங்களில் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தடை காரணமாக பாகிஸ்தான் நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் நாடு திரும்ப தயாராகி வருகிறார்கள்.

ஏற்கனவே உரி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தாக்கியதை தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ராஜ்தாக்கரேயின் நவநிர்மான் சேனா கட்சி கெடு விதித்தது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions