பாலக்காட்டு மாதவனுக்காக தலைவணங்கிய விவேக்

Bookmark and Share

பாலக்காட்டு மாதவனுக்காக தலைவணங்கிய விவேக்

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த விவேக், தற்போது கதாநாயகனாகவும் அவதாரம் எடுத்துள்ளார். ‘நான்தான் பாலா’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். தற்போது, பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த படத்தில் விவேக்குக்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் சமீபத்தில் வெளியாகின. இந்த படத்தின் டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், தன்னுடைய படத்தின் டிரைலருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பு விவேக்குக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதுகுறித்து அவர் கூறும்போது, பாலக்காட்டு மாதவன் டிரைலருக்கு கிடைத்திருக்கும் மக்களின் ஏகோபித்த வரவேற்பிற்கு தலைவணங்குகிறேன் என்றார். மேலும் இணையதள ஊடகங்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இப்படத்தில், அனிருத், விவேக், ஸ்ரீகாந்த் தேவா இணைந்து ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடலை விவேக்கே எழுதியுள்ளார். இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions