திரைப்பட பயிற்சி நிறுவனம் : பல்லவி ஜோஷி விலகல்

Bookmark and Share

திரைப்பட பயிற்சி நிறுவனம் : பல்லவி ஜோஷி விலகல்

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவராக சவுகான் உள்ளார். இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சிலை மாற்றியமைக்க வேண்டும் மற்றும் தலைவர் சவுகானை, அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று அப்பயிற்சி நிறுவன மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகை பல்லவி ஜோஷி கூறியதாவது, இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சில் பதவியிலிருந்து தானும் விலக உள்ளேன். இதற்கான கடிதத்தை, மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். 

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது. எதிர்மறை எண்ணம் கொண்ட நபர்களே, பயிற்சி நிறுவனத்தில் நிறைந்துள்ளனர். இவர்களது மத்தியில், நமக்கும் நேர்மறை விஷயங்களே எழ வாய்ப்பில்லை. இதன்காரணமாக, மனதளவில் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். கவுன்சில் உறுப்பினர் பதவியிலிருந்து விலக திட்டமிட்டுள்ளதாக பல்லவி ஜோஷி கூறியுள்ளார்.

இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் கவுன்சிலில், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ஒளிப்பதிவாளர் ஷைலேஷ் குப்தா, நடிகை வித்யாபாலன், நடிகர்கள் ராகுல் சோலாபுர்கர் உள்ளிட்டோர் உள்ளனர்.

ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், இயக்குநர் ஜானு பரூவா, சமீபத்தில், இந்த கவுன்சில் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்
இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!
என்னமா இது? பிரபல இயக்குனரிடமு வாங்கி கட்டி கொண்ட சாய் பல்லவி - என்னாச்சு?
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் - உச்சகட்ட கடுப்பில் சாய் பல்லவி.!
ட்ராபிக்கில் சிக்கிய சாய் பல்லவி செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - லீக்கான புகைப்படம் உள்ளே.!
சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு!
விஜய் சார் தான் இவை அனைத்திற்கும் காரணம்- சாய் பல்லவி ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions