பாம்பு சட்டை நாளை முதல் படப்பிடிப்பு ஆரம்பம்: மனோபாலா

Bookmark and Share

பாம்பு சட்டை நாளை முதல் படப்பிடிப்பு ஆரம்பம்: மனோபாலா

R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டிஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் மற்றும் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இணைந்து தயாரிக்கும் ‘பாம்பு சட்டை’.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை (பிப்ரவரி 11) முதல் துவங்குகிறது.
 
நடிப்பில் தனக்கென ஒரு தனி பாணியை கையாண்டு வரும் பாபி சிம்ஹா இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பல தமிழ் படங்களில் நடித்து வரும் வளர்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். திரையுலகில்  பரப்பரப்பாக பேசப்படும் இந்த இருவரின் ஜோடி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பாம்பு சட்டை’  படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குனர் சங்கரின் இணை இயக்குனர் ஆவார். K.G. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியின் வெற்றியாளரான அஜீஷ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். கவிபேரரசு வைரமுத்து, யுகபாரதி, விவேகா, கார்க்கி அது வரிகளில் பாடல்கள் உருவாகிறது. ராஜா சேதுபதி மேற்கொள்கிறார். பாண்டியராஜ் கலையமைப்பில் பிருந்தா நடனமமைக்கிறார்,பில்லா ஜகன் சண்டை பயிற்சி அமைக்கிறார்.  

படத்தை பற்றி தயாரிப்பாளர் மனோபாலா கூறும்பொழுது ‘எனது முதல் தயாரிப்பான  “சதுரங்க வேட்டை” திரைப்படத்திற்கு மக்கள் தந்த வெற்றியை மதிக்கின்றேன். ரசிகர்களை கவரும் வண்ணம் அடுத்த தயாரிப்பும் இருக்க வேண்டும், நல்ல படங்களை தயாரிப்பது ஒரு பழக்கமாக மாற வேண்டும் என்று எண்ணினேன். ஆடம் தாசன்  இந்த கதையை கூறிய உடனே இப்படத்தை தயாரிப்பது என முடிவு செய்தேன். நாளை முதல் இப்படத்தின் படப்பதிவு தொடங்கவுள்ளது” என பெருமிதத்துடன் கூறினார்.
 
“தன் திறமைக்கு ஈடு கொடுக்கும் கதாப்பாத்திரங்கள்   மற்றும் கதைகளை தேர்ந்து எடுத்து, தனது வித்தியாசமான நடிப்பால் மக்களை கவர்ந்துள்ள பாபி சிம்ஹா இப்படத்திற்கு பெரும்பலம். ‘பாம்பு சட்டை’ திரைப்படம் சிம்ஹாவின் ஆற்றல் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் அபிமானத்தின் உண்மையான அடையாளத்தையும் வெளிபடுத்தும். கதாநாயகி கீர்த்தி சுரேஷ்  'நெற்றிக்கண்' படத்தில் நடித்த முன்னாள் கதாநாயகி மேனகா அவர்களின் மகள். கீர்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. மேலும் ‘தாமிரபரணி’ புகழ் பானு இப்படத்தில் நடிக்கிறார். கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாப்பாத்திரம் என்பதால் பானுவின் நடிப்பு பெரிதும் பேசப்படும். வெவ்வேறு திறமைகளின் ஒருசேர் கூட்டணியான இந்த பாம்பு சட்டை பலரது நம்பிக்கையை பெற்றுள்ளது. இந்த கூட்டணி ரசிகர்களுக்கு நல்ல படத்தை கொடுக்கும் “என்கிறார் தயாரிப்பாளர் மனோபாலா.


Post your comment





Related News
சூர்யாவுடன் துணிந்து மோதும் கீர்த்தி சுரேஷ்!
பாம்பு சட்டையை பெரிதும் நம்பும் பாபி சிம்ஹா!
பாம்பு சட்டை படப்பிடிப்பு நிறைவு: இறுதிகட்டப் பணிகள் துவக்கம்
மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை
பாம்புசட்டை படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை!
பாம்பு சட்டை படப்பிடிப்பை குறுகிய காலத்தில் முடித்த படக்குழு
பாம்பு சட்டை படப்பிடிப்பு 5 நாள் மட்டுமே பேலன்ஸ் உள்ளது!
பாபி சிம்ஹாவுக்காக காத்திருக்கும் பாம்புசட்டை யூனிட்!
காக்கி சட்டை... 50 நாளில் 50 கோடி வசூல்!
சாட்டை அன்பழகன் படத்தில் கயல் சந்திரன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions