அம்மாவுக்காக நடிகரான பாண்டியராஜன்!

Bookmark and Share

அம்மாவுக்காக நடிகரான பாண்டியராஜன்!

1985-ல் பிரபு-ரேவதி நடித்த கன்னி ராசி என்ற படத்தை முதன்முதலாக இயக்கியவர் பாண்டியராஜன். அந்த படம் அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்தது. ஆனால், அப்படத்தை பார்த்த அவரது அம்மா மட்டும் படத்தை பார்த்து விட்டு படம் பிடிக்காதது போலவே தியேட்டரை விட்டு வெளியே வந்தாராம்.

அதைப்பார்த்த பாண்டியராஜன், என்னம்மா படம் பிடிக்கலையா? என்று கேட்டாராம். அதற்கு, படம் ரொம்ப நல்லாயிருக்கு. ஆனா நீயும் ஒரு நாலு சீன்ல நடிச்சிருந்தா எவ்ளோ நலலாயிருந்துக்கும் என்று தனது மனக்குறையை சொன்னாராம்.

ஆக, அம்மாவுக்கு தான் நடிகனாக வேண்டும் என்கிற ஆசை இருப்பதை தெரிந்து கொண்ட பாண்டியராஜன் அதன்பிறகுதான் ஆண்பாவம் கதையை ரெடி பண்ணினாராம். அதோடு, அந்த ஆண்பாவம் படத்திலும் அம்மாவுக்கு பிடித்தமான ரேவதியையே நாயகியாக வைத்து இயக்கி நடித்ததாக சொல்லும் பாண்டியராஜன், அதன்பிறகு அந்த படத்தை பார்த்த என் அம்மா ரொம்ப சந்தோசப்பட்டார்.

விளைவு, அம்மாவின் சந்தோசத்துக்காக நான் தொடர்ந்து ஹீரோவானேன் அந்த வகையில், எனது ஆசைக்காக டைரக்டர் ஆன நான், நடிகரானது என் அம்மாவின் ஆசைக்காகத்தான் என்கிறார் பாண்டியராஜன். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions