நட்புக்காக சீரியலில் நடிக்கும் பாண்டியராஜன்

Bookmark and Share

நட்புக்காக சீரியலில் நடிக்கும் பாண்டியராஜன்

நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் தற்போது ராஜ் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் என் தங்கை என்ற தொடரில் நடித்து வருகிறார். டி.வி ரியாலிட்டி ஷோக்களில் மட்டுமே பங்கேற்று வந்த பாண்டியராஜன் நட்புக்காக தொடரில் நடிப்பதாக கூறுகிறார். அவர் மேலும் கூறியதாவது:

இந்த சீரியலில் நடிக்கும் முன்பு வரை சீரியலில் நடிக்கும் எந்த திட்டமும் இல்லை. காரணம் சினிமாவில் இப்போதும் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆய்வுகூடம் என்ற படத்தில் வில்லனாக நடிக்கிறேன். என் மகன் நடிப்பில் ஆண்பாவம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க இருக்கிறேன்.

இந்த நிலையில் எனது நீண்ட நாள் நண்பர் மங்கை அரிராஜன் என் தங்கை சீரியல் கதையை சொல்லி நீங்கள்தான் நடிக்க வேண்டும். உங்களை மனதில் வைத்துதான் பரிசல் பாண்டி என்ற கேரக்டரை உருவாக்கி இருப்பதாக சொன்னார். அவரது நட்புக்காக நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இது ஓக்கேனக்கலை களமாக கொண்ட கதை. சினிமா படப்பிடிப்புக்காக பலமுறை ஓக்கேனக்கல் சென்றிருந்தாலும் சின்னத்திரை சீரியலுக்காக சென்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

சினிமாவை விட சீரியலுக்கு கடினமாக உழைக்க வேண்டியது இருக்கிறது. சீரியலில் நடிப்பவர்கள் அனைவருமே ஒரு குடும்பம் போன்று பழகுகிறார்கள். இந்த அனுபவமும் புதிதாக இருக்கிறது. என்கிறார் பாண்டியராஜன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions