பாண்டியராஜனுக்கு டை மாட்டி விட்ட எம்ஜிஆர்!

Bookmark and Share

பாண்டியராஜனுக்கு டை மாட்டி விட்ட எம்ஜிஆர்!

டைரக்டர் கே.பாக்யராஜிடத்தில் உதவியாளராக பணியாற்றியவர் பாண்டியராஜன். அந்த சமயத்தில் பாக்யராஜ் இயக்கும் படங்களைப் பார்க்க எம்ஜிஆர் செல்வதுண்டு. அப்போது அவருடன் நின்று ஒரேயொரு போட்டோ எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஆசைப்படுவாராம் பாண்டியராஜன்.

ஆனால் அந்த நேரம்பார்த்து அவருக்கு ஏதாவது வேலை கொடுத்து அனுப்பி விடுவாராம் பாக்யராஜ். இருப்பினும், ஒருமுறை, பாக்யராஜின் படத்தை பிரிவியூ தியேட்டரில் எம்ஜிஆர் பார்த்து விட்டு வெளியேவந்தபோது, நான்தான் இந்த படத்தோடு அசோசியேட் டைரக்டர் என்று பாண்டியராஜன் சொன்னதை அடுத்து, எம்ஜிஆருடன் நின்று போட்டோ எடுக்கும் வாய்ப்பினை பெற்றாராம்.

ஆனால் அப்படி ஆசை ஆசையாக எடுத்துக்கொண்ட போட்டோவை அவர் தனது வீட்டில் வைத்திருந்தபோது வீட்டுக்கு வந்தவர்கள் யாரோ திருடிச்சென்று விட்டார்களாம். இதனால் கண்கலங்கினாராம் பாண்டியராஜன்.

ஆனால், பின்னர் அவர் ஆண்பாவம் படத்தை இயக்கியபோது எம்ஜிஆர் அந்த படத்தை பார்க்க சென்றதோடு, பாண்டியராஜனின் திருமணத்தையும் நடத்தி வைத்தாராம். அப்போது மேடையில் மணக்கோலத்தில் நின்ற பாண்டியராஜன் சட்டையில் கட்டியிருந்த டை சரியாக மாட்டவில்லையாம்.

இதை பார்த்த எம்ஜிஆர்., இப்பத்தான் முதன்முறையாக டை கட்டியிருக்கே போலிருக்கு. பார்த்தாலே தெரியுதே என்று சொல்லிக்கொண்டு அவர் கட்டியிருந்த டையை கழற்றி அழகாக கட்டி விட்டாராம்.

அதோடு, பாண்டியராஜனின் திருமண நிகழ்ச்சியில் 20 நிமிடங்கள் அமர்ந்து அனைவரிடமும் அன்போடு பேசிவிட்டுத்தான் விடைபெற்றாராம் எம்ஜிஆர். இந்த தகவலை நேற்று காலை சென்னையில் நடைபெற்ற சாலையோரம் படத்தின் ஆடியோ விழாவில் தெரிவித்தார் பாண்டியராஜன்.   


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions