கிருஷ்ணா உடன் ஆனந்தி இணையும் பண்டிகை

Bookmark and Share

கிருஷ்ணா உடன் ஆனந்தி இணையும் பண்டிகை

முரட்டு சுபாவத்துடனும் கோபத்துடனும் வளரும் அனாதையான வேலு, ஒருகட்டத்தில் எல்லோரையும் போல் ஒரு அமைதியான வாழ்க்கை வேண்டி தன்னை மாற்றி சராசரி மனிதனாகிறான்.

சண்டை வேண்டாம் என ஒதுங்கி இருக்கும் வேலு சந்தர்ப்ப சூழ்நிலையால் நிழல் உலகில் illegal-ஆக நடத்தப்படும் பந்தயச் சண்டைக்கு அறிமுகமாகிறான். அடக்கி வைத்த கோபம் வெளிக்காட்டும் இடமாகவும், பணம் கொட்டும் கோட்டையாகவும் இந்த பந்தயச் சண்டை திகழ, அதில் விரும்பி விழுகிறான்.

வேலுவிற்கு எல்லாம் கொடுத்த இந்த சண்டை எதிர்ப்பார்க்காத ஒரு பெரிய பிரச்சனையையும் கொடுக்க, ப்படி அதில் இருந்து அவன் தப்பிக்கிறான் என்பது மீதிக் கதை.

இப்படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். இவர்களோடு கருணாஸ், பருத்திவீரன் சரவணன், நிதின் சத்யா, சபரிஷ், கோலி சோடா மது சூதனன், பிளாக் பாண்டி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் பல திறமையான புதுமுக நடிகர்களையும் இவர்களோடு அறிமுகம் செய்கிறோம். விஜயலட்சுமி அகத்தியனின்  Tea Time Talks தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் புதுமுக இயக்குனர் ஃபெரோஸ் இயக்கும் பண்டிகை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார் நடிகை சமந்தா.

பண்டிகை படத்தின் Firstlook பற்றி சமந்தா கூறுகையில்" பண்டிகை படத்தின் First look அருமையாக இருக்கிறது. இப்படம் வெற்றியடைய கிருஷ்ணா மற்றும் பண்டிகை படக் குழுவினரை வாழ்த்துகிறேன் எனக் கூறினார். 


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions