என் நண்பனின் நிஜ வாழ்க்கை கதை தான் கதகளி: பாண்டிராஜ்

Bookmark and Share

என் நண்பனின் நிஜ வாழ்க்கை கதை தான் கதகளி: பாண்டிராஜ்

விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘கதகளி’. இதில் விஷாலுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடித்துள்ளார். பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் விஷால், இயக்குனர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் ஆதி, கருணாஸ், மைம் கோபி, பவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

பாண்டிராஜ் பேசும்போது, ‘கதகளி’ படத்தின் டிரைலரை பார்த்துவிட்டு அனைவரும் இது உங்கள் படம் போல் இல்லையே என்று கேட்டனர். இப்படம் விஷாலுக்கு நிச்சயம் புதிய பரிமாணத்தை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

இப்படத்தின் கதை நிஜ சம்பவங்களை கோர்வையாக கொண்டது. என் நண்பனின் நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை படமாக இயக்கியிருக்கிறேன். இயக்குனர் சுசீந்திரன் மூலம் விஷாலை சந்தித்து கதை சொன்னேன். 

விஷாலிடம் நான் இரண்டு கதைகளை கூறினேன். முதலாவதாக குடும்பபாங்கான ஆக்க்ஷன் படத்துக்கான கதை.

விஷாலுக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. பின்னர் இன்னொரு கதையை கூறினேன். அதையும் கேட்டு விட்டு இரண்டாவதாக சொன்ன கதை மிகவும் பிடித்துவிட்டது என்றார். இந்த கதை நாவலை போல மிகவும் சுவாரசியமாகவும் அருமையாகவும் உள்ளது நிச்சயம் இந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று கூறினார். 

படத்தில் மொத்தம் இரண்டு பாடல்களே உள்ளன. முதலில் நாங்கள் படத்துக்காக குத்து பாடல் ஒன்றை சேர்த்திருந்தோம். படத்தை பார்த்த பிறகு, படத்தின் இரண்டாம் பாதியில் பாடல்களே தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டோம். படம் சிறப்பாக வந்துள்ளது.

மக்கள் நிச்சயமாக இதை ரசிப்பார்கள். நாயகி கேத்ரீன் தெரசா மீனு குட்டி என்னும் அழகான கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சிறந்த டீம் அமைந்தது மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.


Post your comment





Related News
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions