பாண்டிராஜை பாராட்டிய இயக்குனர்கள்

Bookmark and Share

 பாண்டிராஜை பாராட்டிய இயக்குனர்கள்

இயக்குனர் பாண்டிராஜ் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து ‘ஹைக்கூ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கு முன்னதாக சிம்புவை வைத்து இவர் இயக்கிய ‘இது நம்ம ஆளு’ படம் இன்னும் வெளிவராமல் கிடப்பில் கிடக்கிறது. இப்படத்தில் இன்னும் சில வேலைகள் பாக்கி இருப்பதால், படத்தை வெளியிடாமல் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது நெருங்கிய நண்பர்களான இயக்குனர் சுசீந்திரனுக்கும், இயக்குனர் திருவுக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தை பாண்டிராஜ் பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளார். படத்தை பார்த்த இருவரும் பாண்டிராஜூக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திரு கூறும்போது, சிம்பு நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படத்தை சுசீந்திரனுடன் இணைந்து பார்த்தேன். நல்ல உணர்வு கொண்ட, மெல்லிய தென்றலான ரொமான்டிக் படமாக இருந்தது. சிம்பு-நயன்தாராவின் நடிப்பு அற்புதம். பாண்டிராஜூக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
சுசீந்திரன் கூறும்போது, பாண்டிராஜின் ‘இது நம்ம ஆளு’ படத்தை மிகவும் விரும்புகிறேன். நிச்சயம் வெற்றியடையும். ‘இது நம்ம ஆளு’ படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இருவரின் பாராட்டும் பாண்டிராஜூக்கு புது தெம்பை கொடுத்துள்ளது. அதே தெம்புடன் கூடிய விரைவில் படத்தை வெளியிட முயற்சிகளை மேற்கொள்ளவிருக்கிறார். இப்படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions