சினிமாவில் கிடைக்கும் பிரபலம் மூலம் நல்லது செய்யும் மைம் கோபி : இயக்குனர் பாண்டிராஜ்

Bookmark and Share

சினிமாவில் கிடைக்கும் பிரபலம் மூலம் நல்லது செய்யும் மைம் கோபி : இயக்குனர் பாண்டிராஜ்

‘ஜி மைம் ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தின் மூலம், மைம் கலையை வளரும் இளைய தலைமுறையினரிடம் வெற்றிக்கரமாக கொண்டு சென்றுள்ள மைம் கோபி, சினிமாவுக்கான நடிப்பு பயிற்சியை கற்பித்து வருவதுடன், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருபவர் .

வருடா வருடம் தனது ‘மைம்’  கலையின் மூலமாக நடத்தும் நிகழ்ச்சி மூலம் ஆதரவற்றவர்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார். இந்த வருடம் எச்.ஐ.வி.யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் சினிமாத்துறை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் மைம் கலையில் இசைக்கருவிகளை வாசிப்பது போன்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அம்மாவின் அருமை பற்றி மைம் கோபி குழுவினர் நடித்துக்காட்டியது பார்வையாளர்களை கண்கலங்க வைத்தது. விழாவுக்கு  வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர்.

விழாவில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ்:- மைம் கோபி நடத்தும் இந்த விழா மதிக்கத்தக்க ஒரு நிகழ்ச்சி. தனக்கு கிடைக்கும் சினிமா புகழ் மூலமாக இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தி, நல்ல காரியங்களுக்காக தொடர்ந்து அவர் செய்து வரும் சேவைகளை நான் பாராட்டுகிறேன். சினிமாவில் பிரபலமாக இருக்கும் பலரும் இதுபோன்ற நல்ல காரியங்களுக்கு உதவ  வேண்டும், நானும் எனது பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருவேன்.

நான் குழந்தைகளை வைத்து படம் எடுத்து இருக்கிறேன். இந்த மேடையில் இத்தனை குழந்தைகளை ஒரே நேரத்தில் இவ்வளவு  அருமையாக நடிக்க வைப்பது பெரும் சிரமம். கோபி அருமையான ஒரு நடிகர் மட்டுமல்ல, ஒரு நல்ல இயக்குனராக எனக்கு தெரிகிறார். தொடர்ந்து எனது ஆதரவு எப்போதும் மைம் கோபிக்கும் இந்த குழுவினருக்கும் உண்டு என்று பேசினார்.

விழாவில் நடிகர் கிஷோர் பேசும்போது, கோபியை நான் பாராட்டுகிறேன், பிரமாதமான ஒரு நிகழ்ச்சி, எனக்கும் மைம் குழுவில் சேர்ந்து இதுபோன்று நடிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது, அடுத்த வருடம் நான் இந்த கலையை கோபியுடன்  கற்றுக்கொண்டு இதே மேடையில் நடிப்பேன் என்றார் .

விழாவில் இயக்குனர்கள் சுசீந்திரன், கரு.பழனியப்பன், மகிழ் திருமேனி, பாலாஜி மோகன், சிவா, ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன், நடிகர்கள் காளி வெங்கட், சரவணன், பாண்டி, முரளி, ஆத்மா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


Post your comment

Related News
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions