குழந்தைகள் செய்யும் சேட்டைகள் வைத்து உருவாக்கிய படம் பசங்க-2- பாண்டிராஜ் பேட்டி!

Bookmark and Share

குழந்தைகள் செய்யும் சேட்டைகள் வைத்து உருவாக்கிய படம் பசங்க-2- பாண்டிராஜ் பேட்டி!

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் பாண்டிராஜ் பேசியபோது, “வெகுநாட்களுக்கு பிறகு பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களை சந்தித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.. இந்த கதையை உருவாக்க மிகப்பெரிய காலம் தேவைப்பட்டது.

நான் இந்த கதையை உருவாக்க அதிக காலம் எடுத்து கொண்டேனா என்று எல்லோரும் கேட்கிறார்கள். நான் இந்த கதையில் கதையின் மாந்தர்களாக வரும் குழந்தைகள் பற்றி மிக நீண்ட ஆய்வு மேற்கொண்டேன் என்று கூறலாம்.

பசங்க2 படத்தின் கதையை என்னுடைய நண்பர் ஒருவர் தங்கள் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் மற்றும் அவர்களை பற்றிய சில விஷயங்களை குறிப்பாக எடுத்துக் கொண்டு , எ.டி.ஹைச்.டி என்னும் விஷயத்தை பற்றி ஆராய்ந்து கதையாக உருவாக்கினேன்.

அதை அப்படியே படமாக எடுத்தால் அது நிச்சயம் டாக்குமென்ட்ரி படம் போல் இருக்கும் ஆதலால் படத்தில் சில கமர்சியல் விஷயங்களை சேர்த்து படத்தை அழகாக எடுத்துள்ளேன்.

பசங்க2 படத்தின் ;படபிடிப்புக்கு செல்லும் முன்னர் இதை போல் வேறேதும் படம் வந்துள்ளதா ?? என்று ஹாலிவுட் படங்களை தேடி பிடித்து பார்த்தபோது அதை போல் ஒரு படம் கூட இல்லை என்பது எனக்கு தெளிவாக தெரியவந்தது.

இப்படம் பள்ளிகளில் இருக்கும் போது தப்பு சத்தம் கேட்டவுடன் வகுப்பில் இருக்கிறோம் என்று கூட பார்க்காமல் ஆட்டம் போடும் குழந்தைகளை பற்றி பேசும். நான் குறிப்பிட்ட பத்து குழந்தைகளை தேர்ந்தெடுத்து கொண்டு அவர்களை பற்றி ஆய்வு மேற்கொண்டு கதையை உருவாக்கினேன்.

பசங்க முதல் பாகத்தை போன்றே பசங்க2 படத்திலும் நிச்சயம் ட்விஸ்ட் மற்றும் டர்ன்ஸ் ஏதும் இருக்காது.

இப்படத்தின் மூலம் நான் சொல்ல நினைத்த கருத்து மக்களுக்கு போய் சேர வேண்டும் என்றால் நிச்சயம் கதைக்கு ஸ்டார் வேல்யூ கொண்டு ஒரு நாயகன் தேவை என்பதால் நான் தயாரிப்பாளரான சூர்யா அவர்களிடம் கேட்டேன் அவரும் நான் நிச்சயம் செய்கிறேன் என்று உடனே ஒத்துக்கொண்டு நடித்தார். சூர்யா சாரின் ரசிகர்களாக யாரும் படத்துக்கு வரவேண்டாம்.

அவரை நான் படத்தில் எல்லோரும் வியக்கும் அளவுக்கு நிஜமாகவே புதுமையாக காட்டியுள்ளேன். படத்தில் அமலா பால் அவர்களின் கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும், அவர் இந்த படத்தில் மருத்துவராக நடித்துள்ளார்.

மக்கள் படத்தை நிச்சயம் ரசிப்பார்கள் என்பதில் எனக்கு மாற்று கருத்தே இல்லை , படம் முழுவதும் அனைவரும் சிரித்து கொண்டே இருப்பார்கள் என்றார்” இயக்குநர் பாண்டிராஜ்.

 


Post your comment





Related News
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions