பண்டிகை நாட்களை பிடித்த பாண்டிராஜ் படங்கள்!

Bookmark and Share

பண்டிகை நாட்களை பிடித்த பாண்டிராஜ் படங்கள்!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடிக்கும் ‘பசங்க-2’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இது மட்டுமில்லாமல், பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘கதகளி’ படமும், சிம்பு நடிப்பில் ‘இது நம்ம ஆளு’ படமும் உருவாகி வருகிறது. அடுத்தடுத்த படங்களில் இடைவிடாது பணியாற்றி வரும் பாண்டிராஜ், தன்னுடைய படங்கள் அனைத்தையும் பண்டிகை நாட்களில் வெளியிடவுள்ளார். 

அதன்படி, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘பசங்க-2’ படத்தை கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி டிசம்பர் 24-ந் தேதி வெளியிடவுள்ளார். விஷால் நடிப்பில் உருவாகிவரும் ‘கதகளி’ படத்தை ஜனவரி 14-ந் தேதி பொங்கலன்று வெளியிடவுள்ளார்.

‘இது நம்ம ஆளு’ படத்தை பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடவுள்ளார். இந்த படங்கள் வெளியாகும் தேதிகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட தேதியில் அனைத்து படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
அஜித்துக்கு நான் ஆபிஸ் பாய் வேலை பார்த்தேன், விஜய்யை இயக்கனும் - முன்னணி இயக்குனர்
விழா மேடையிலேயே பயங்கரமாக கோபப்பட்ட பாண்டிராஜ்- நடிகைகளுக்கு செம திட்டு
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
நடிகர் கார்த்திக்கு இப்படியொரு ஆசையா- நிறைவேறுவதை சூர்யா தான் முடிவு செய்ய வேண்டும்
உண்மை தான் கசக்குது - யார் காரணம் புலம்பும் கார்த்திக்
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions