இது நம்ம ஆளுக்கு விடிவு காலம் பிறந்தாச்சு

Bookmark and Share

இது நம்ம ஆளுக்கு விடிவு காலம் பிறந்தாச்சு

சிம்பு-நயன்தாரா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் படம் ‘இது நம்ம ஆளு’. காதல் முறிவுக்கு பிறகு சிம்புவும் நயன்தாராவும் இணைந்து படம். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள படம். இப்படி எண்ணற்ற சிறப்பம்சங்களை கொண்டு உருவாகியுள்ள இப்படம் எப்போது ரிலீசாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவிக் கொண்டே வந்தது.

இப்படத்திற்கு பல ரீலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டும் வெளியாவது தள்ளிக் கொண்டே சென்றது. இந்நிலையில், தற்போது வருகிற ஏப்ரல் 27-ந் தேதி இப்படம் வெளியாகும் என உறுதியாக கூறப்படுகிறது. மேலும், இப்படத்திற்கு தமிழக அரசின் வரிச்சலுகையும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ‘பசங்க’ பாண்டிராஜ் இயக்கியுள்ளார். ஆண்ட்ரியா, சூரி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.  


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
சத்தமில்லாமல் நடைபெறும் சிம்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழா
சிம்பு படத்தை தொடர்ந்து தனுஷ் படத்திற்கு அடித்த லக்
காதலர் தினத்தன்று காதலர்களுக்கு பரிசாக வெளியான “என் கண்ணம்மா” பாடல்
இது நம்ம ஆளு வெற்றி – ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சிம்பு!
இது நம்ம ஆளு செய்த பிரம்மாண்ட வசூல் விவரம்!
இறைவன் தன்னுடைய சக்தியை காட்டி விட்டார் : சிம்பு நெகிழ்ச்சி!
25 கோடி கிளப்பில் இணைந்த இது நம்ம ஆளு!
உடல் எடை கூடியதற்கு காரணம் சொல்கிறார் சிம்பு!
தேர்தலுக்காக நிறுத்தி வைக்கப்பட்ட 7 புதிய படங்கள் இன்று ரிலீஸ்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions