பாண்டிராஜ்க்கு நன்றி சொன்ன குறளரசன்

Bookmark and Share

பாண்டிராஜ்க்கு நன்றி சொன்ன குறளரசன்

சிம்பு நடிப்பில் பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் நிலையில், சிம்புவின் பிறந்தநாளான இன்று இப்படத்தின் பாடல்களை வெளியீட்டனர். இந்த விழாவில் டி.ராஜேந்தர், குறளரசன், பி.டி.செல்வகுமார் உள்ளிடோர் கலந்துக் கொண்டனர்.

இதில் டி.ராஜேந்தர் பேசும்போது, ‘சிம்பு பிறந்தநாளில் ‘இது நம்ம ஆளு’ படத்தின் பாடல்களை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இப்படத்தில் சிம்பு, குறளரசனுடன் நானும் ஒரு பாடல் பாடியிருக்கிறேன்.

சிம்புவை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்திய போதும், ஹீரோவாக அறிமுகப்படுத்திய போதும் நீங்கள் கொடுத்த ஆதரவை போல, இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கும் குறளரசனுக்கும் உங்கள் ஆதரவை தரவேண்டும்.

இப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட இருக்கிறது. ஒரு பாடலை ஆண்ட்ரியாவை வைத்தும் மற்றொரு பாடலை பிரம்மாண்டமாகவும் படமாக்க இருக்கிறோம். மார்ச் மாதத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். தேனாண்டாள் பிலிம்ஸ் இப்படத்தை வெளியிட இருக்கிறது’ என்றார்.

குறளரசன் பேசும்போது, ‘முதலில் என் குடும்பத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அண்ணன் படத்திற்கு முதலில் இசையமைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படத்திற்காக நிறைய டியூன்களை தயார் செய்தேன்.

அதில் சிறந்ததை தேர்வு செய்து இசையமைத்திருக்கிறேன். இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா, ஸ்ருதி ஹாசன், சிம்பு, டி.ராஜேந்தர் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். நானும் ஒரு பாடலை பாடியிருக்கிறேன். எல்லாம் சிறப்பாக வந்திருக்கிறது.

இந்த சமயத்தில் இயக்குனர் பாண்டிராஜ்க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை பற்றி நிறைய செய்திகள் வந்தது. பாடல்களுக்கு இசையமைக்க லேட் செய்கிறேன் என்று.

எல்லா பாடல்களும் நல்லதாகவும் சிறப்பாகவும் வரவேண்டும் என்பதற்காகத்தான் தாமதம் ஆனது. நான் இசையமைத்த பாடல்களை இயக்குனர் பாண்டிராஜ் கேட்டவுடனே நன்றாக இருக்கிறது என்று சொன்னார்.

சமீபத்தில் வெளியான கெத்து படத்தில் நடிகர் சத்யராஜ், உதயநிதியின் அப்பாவாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இப்படத்தை தொடர்ந்து தற்போது அவர், ராகவா லாரன்ஸ் நடிக்கும் பைரவா படத்தில் லாரன்ஸுக்கு தந்தையாக நடித்து வருகிறார்.

இது ஹீரோவுக்கு சமமான ஒரு முக்கியமான கதாபாத்திரம் என கூறப்பட்டு வருகிறது. ‘காஞ்சனா 2’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்தடுத்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE THIS POST:    


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions