டைரக்டர் பாண்டிராஜ் மீது டி.ராஜேந்தர் புகார்

Bookmark and Share

டைரக்டர் பாண்டிராஜ் மீது டி.ராஜேந்தர் புகார்

சிம்பு, நயன்தாராவை ஜோடியாக வைத்து ‘இது நம்ம ஆளு’ என்ற படத்தை பாண்டிராஜ் இயக்கினார். இப்படத்துக்கு சிம்புவின் சகோதரர் குறளரசன் இசையமைத்தார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. ஒரு பாடல் காட்சியும் சில வசன காட்சிகளும் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. 

படம் முடிவடையாத நிலையில் படப்பிடிப்பு திடீரென தள்ளி வைக்கப்பட்டது. குறளரசன் படத்துக்கான பாடலை இன்னும் கம்போஸ் செய்யவில்லை என்றும் படப்பிடிப்புக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. இதனாலேயே படம் தாமதமாவதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் பாண்டியராஜ் ‘ஹைக்கூ’ என்ற படத்தை இயக்க போய்விட்டார். இந்த படத்தை சூர்யா தயாரிக்கிறார். அத்துடன் கவுரவ தோற்றத்திலும் இந்த படத்தில் தோன்றுகிறார். குழந்தைகள் படமாக தயாராகிறது. 

இந்த நிலையில் பாண்டிராஜ் ‘இது நம்ம ஆளு’ படத்தை முடித்து கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் டி.ராஜேந்தர் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் குறித்து பாண்டிராஜுடம் கேட்டபோது, ‘இது நம்ம ஆளு’ படத்துக்கு தேவையான முக்கிய பாடலை குறளரசனும் படப்பிடிப்புக்கு தேவையான பணத்தை டி.ராஜேந்திரும் தயாராக வைத்து இருந்தால் ‘இது நம்ம ஆளு’ படத்தை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றார்.


Post your comment





Related News
பழம்பெரும் இயக்குனர் சி.வி.ராஜேந்தர் காலமானார்
அவரெல்லாம் ஒரு ஆளா? தகுதியே இல்லாத மனிதர் - பிரபல நடிகரை வெளுத்து வாங்கிய தன்ஷிகா.!
பஞ்ச்சில் அசால்ட் செய்யும் டி.ராஜேந்தர் அவர்களின் மாஸ் பஞ்ச் வசனங்கள் இதோ
பிரபல தனியார் தொலைக்காட்சியை தாக்கி பேசிய டி.ராஜேந்தர்
சிம்பு ஹீரோயின்களை தொட்டு நடிப்பதற்கு நான் தான் காரணம்- டி.ஆர் ஓபன் டாக்
விஜய் பற்றி பேசும் போது கலாய்த்தவர்களுக்கு செம பதிலடி கொடுத்த டி.ஆர்!
எத்தனை வெற்றி கொடுத்தாலும் பணிவுடன் இருப்பவர் விஜய்சேதுபதி: டி.ராஜேந்தர்
லட்சம் கோடி இருந்தாலும் நான் பேசுறதைத்தான் பேசுவேன்: டி.ஆர்.
அம்மா அப்பாவை ஜோடியாக பாடவைத்த சிம்பு! அனிருத் கூட்டணி
என் பணம் மட்டும் வேண்டுமா? மீனவர் கொலைக்கு எதிராக பொங்கிய டி.ஆர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions