பாண்டியநாடு படக்குழு அடுத்த இன்னிங்சை ஆரம்பித்தது

Bookmark and Share

பாண்டியநாடு படக்குழு அடுத்த இன்னிங்சை ஆரம்பித்தது

நடிகர் விஷால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘பாண்டியநாடு’. இப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றியடைந்ததை அடுத்து தற்போது மீண்டும் புதிய படத்தில் இணையப் போவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளனர். சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் ஒரு வீட்டில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர்.

இந்த தொடக்க விழாவில், நடிகர்கள் விஷால், ஆனந்தராஜ், ஆர்.கே., பாலிவுட் நடிகர் முரளி சர்மா, இயக்குனர் சுசீந்திரன், வேந்தர் மூவிஸ் மதன், டி.சிவா, ஆர்ட் டைரக்டர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், காஸ்ட்யூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது விஷால் கூறும்போது, இப்படம் எல்லோருக்கும் ஒரு சிறப்பு வாய்ந்ததாக இருக்கவேண்டும். பாண்டியநாடு படக்குழு மீண்டும் இணைந்திருப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய வெற்றியை தக்க வைத்துக் கொள்ளவேண்டும் என்ற பொறுப்பு நிறைய ஏற்பட்டிருக்கிறது. இப்படத்தில் புதியவராக வேல்ராஜ் இணைந்துள்ளார் என்று தெரிவித்தார்.

வேல்ராஜ் கூறும்போது, இந்த படத்தில் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பாடல்கள் மிகவும் அருமையாக வந்துள்ளது. இப்படத்தில் இரண்டு பாடல்களை நான் ஏற்கெனவே கேட்டுவிட்டேன். மியூசிக் ரொம்பவும் அழகாக இருக்கிறது. விஷால்-சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் பணிபுரிய ஆர்வமுடன் இருக்கிறேன்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்திற்கு ஏற்கெனவே இரண்டு பாடல்களை இசையமைத்துவிட்டார் இமான். விரைவில் இவற்றை படமாக்க உள்ளனர்.
காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். இன்று நடந்த படப்பிடிப்பில் காஜல் அகர்வால் கலந்துகொள்ளாவிட்டாலும், இன்னும் சில தினங்களில் காஜல் அகர்வால் இப்படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions