மீண்டும் வில்லனான பாண்டியராஜன்!

Bookmark and Share

மீண்டும் வில்லனான பாண்டியராஜன்!

காமெடி கலந்த பல படங்களில் நாயகனாக நடித்தவர் பாண்டியராஜன். அவரை அஞ்சாதே படத்தில் வில்லனாக்கினார் மிஷ்கின். ஆனால் அதுபற்றி அவர் பாண்டியராஜனை அழைத்து பேசியபோது, அவர் கெக்கபிக்க என்று சிரித்து விட்டாராம்.

வில்லனுக்கென்று ஒரு மூஞ்சி இருக்கு. அதை விட்டுட்டு என்னைப்போய் வில்லனாக நடிக்க வைக்கப்போறதா சொல்றீங்களே? உணமையாவா? இல்லை கிண்டல் பண்றீங்களா? என்று அவரைக்கேட்டாராம் பாண்டியராஜன்.

அதற்கு, சத்யமா சொல்றேன். என்னோட அஞ்சாதே படத்தில் வில்லன் நீங்கதான் என்றாராம் மிஷ்கின். அவரது பேச்சில் இருந்த உறுதியைப்பார்த்த பாண்டியராஜன். அது சாத்தியப்படுமா? ரசிகர்கள் சிரிக்க மாட்டார்களா? என்றாராம். சிரிக்க மாட்டார்கள்.

அந்த அளவுக்கு உங்களை சீரியஸ் வில்லனாக்கிக்காட்டுகிறேன் என்று சொன்ன மிஷ்கின். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் மீசையை எடுக்க வேண்டும் என்றாராம். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாண்டியராஜன், நம்மகிட்ட வளர்றதே அது ஒண்ணுதான்.

அதையும் எடுத்துட்டா எப்படி? என்று கேட்டதற்கு, அதை எடுத்துட்டா நீங்களும் வில்லன்தான் என்று சொல்ல அப்படியே செய்தாராம் பாண்டியராஜன். விளைவு மிஷ்கின் சொன்னதுபோலவே வில்லன் தோரணையில் இருந்தாராம் பாண்டியராஜன்.

ஆக அந்த படத்தில் முதன்முறையாக வில்லனாக நடித்து மிரட்டினார். ஆனால் அதையடுத்து அவரை யாருமே வில்லனாக பார்க்காத நிலையில், தற்போது சாலையோரம் என்ற படத்தில் மீண்டும் பாண்டியராஜனை வில்லனாக்கியிருக்கிறார்கள்.

ஏற்கனவே மிஷ்கின் படத்தில் வில்லனாக நடித்ததை விட இந்த படத்தில் இன்னொரு பரிமாணத்தில் தனது வில்லன் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறாராம் பாண்டியராஜன்.

 


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
சினிமாவை ஆன்லைனில் பாடம் எடுக்கும் பாண்டியராஜன்
கல்லூரி மாணவியை காதல் திருமணம் செய்கிறார் பாண்டியராஜனின் மகன் பிரித்வி
ஆய்வுக்கூடத்தில் மூளைமாற்று ஆபரேஷன்
சின்னத்திரையில், பாண்டியராஜன் நடிக்கும் என் தங்கை
அஞ்சாதேவை தொடர்ந்து மீண்டும் வில்லனாக பாண்டியராஜன்..!
நடிகர் பாண்டியராஜனுடன் குத்தாட்டம் போட்ட நடிகை ரோஜா !
அப்பாவின் கதைக்கு நடிக்க தயாராகும் மகன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions