கல்லூரி மாணவியை காதல் திருமணம் செய்கிறார் பாண்டியராஜனின் மகன் பிரித்வி

Bookmark and Share

கல்லூரி மாணவியை காதல் திருமணம் செய்கிறார் பாண்டியராஜனின் மகன் பிரித்வி

நடிகர் பாண்டியராஜனின் மகன் பிரித்வி ‘கைவந்த கலை’, ‘நாளைய பொழுதும் உன்னோடு’, ‘பதினெட்டாம் குடி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பிரேம்நாத் - ஷீலா தம்பதிகளின் மகள் அக்ஷயா என்ற கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்தது.

பிரித்வி-அக்ஷயா காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு, திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். அதைத் தொடர்ந்து, இவர்களின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை 6.30 மணிக்கு நடந்தது. 

இந்த காதலை பற்றி நடிகர் பிரித்வி கூறுகையில்:-

‘‘நானும் அக்ஷயாவும் சென்னையில் நடந்த ஒரு விளம்பர நிகழ்ச்சியில் முதன் முதலாக சந்தித்தோம். அப்போது எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது. அதன் பிறகு, ‘பதினெட்டாம் குடி’ படப்பிடிப்புக்காக நான் கொச்சி சென்றேன். அப்போது அக்ஷயா மீண்டும் என்னை சந்தித்தார். எங்கள் நட்பு காதலாக மலர்ந்தது.

இருவீட்டார் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் செய்துகொள்ள இருக்கிறோம். என்றார்.


Post your comment





Related News
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
சினிமாவை ஆன்லைனில் பாடம் எடுக்கும் பாண்டியராஜன்
ஆய்வுக்கூடத்தில் மூளைமாற்று ஆபரேஷன்
மீண்டும் வில்லனான பாண்டியராஜன்!
சின்னத்திரையில், பாண்டியராஜன் நடிக்கும் என் தங்கை
அஞ்சாதேவை தொடர்ந்து மீண்டும் வில்லனாக பாண்டியராஜன்..!
நடிகர் பாண்டியராஜனுடன் குத்தாட்டம் போட்ட நடிகை ரோஜா !
அப்பாவின் கதைக்கு நடிக்க தயாராகும் மகன்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions