சீரியல்களில் அப்பா வேடம் கேட்கும் பாண்டு!

Bookmark and Share

சீரியல்களில் அப்பா வேடம் கேட்கும் பாண்டு!

ரஜினி நடித்த பணக்காரன் தொடங்கி பாட்டுக்கு நான் அடிமை, சின்னதம்பி, நடிகன், நாட்டாமை என பல படங்களில் காமெடி கலந்த கேரக்டர்களில் நடித்தவர் பாண்டு.

தனக்கென ஒரு தனி பாணியை வைத்துக்கொண்டு நடித்து வந்த இவர், கடைசியாக சிகரம்தொடு, காஞ்சனா-2 ஆகிய படங்களில் கவனிக்கப்படும் கேரக்டர்களில் நடித்திருந்தார். மேலும், தனது மகன் பிண்டு பாண்டுவை வெள்ளச்சி என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் செய்தார்.

ஆனால் அந்த படம் ஓடவில்லை. அதனால் பின்னர் மகனின் ஆர்வத்தை வேறு பக்கமாக திருப்பி விட்டார். அதேசமயம் தான் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். என்றபோதும் சமீபகாலமாக புதுவரவு நடிகர்களின் ஆதிக்கத்தினால் பாண்டுவிற்கான சினிமா வாய்ப்புகள் கணிசமான அளவு குறைந்து விட்டது.

அதனால் ஏற்கனவே ராஜ் டிவியில் வெளியான உறவுகள் சங்கமம் என்ற சீரியலில் ஒரு மெகா கேரக்டர்களில் நடித்தவர், இப்போது வேறு சில சீரியல்களில் அப்பா வேடங்களில் நடிப்பது சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கிறார்.

தான் எதிர்பார்ப்பது போன்று மெகா தொடர்கள் கிடைத்து விட்டால், அதன்பிறகு சீரியல்களின் பிரதான அப்பாவாகி விடுவாராம் பாண்டு.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions