பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மரணம்!

Bookmark and Share

பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் மரணம்!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பஞ்சு அருணாச்சலம். காரைக்குடி அருகில் சிறுகூடல் பட்டி என்ற ஊரில் பிறந்த பஞ்சு அருணச்சாலம், சினிமாவுக்குள் நுழைந்த ஆரம்பத்தில் கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக பணியாற்றினார். 1974-ஆம் ஆண்டு ‘எங்கம்மா சபதம்’ என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அதைத் தொடர்ந்து ரஜினி, கமலை வைத்து நிறைய திரைப்படங்களைத் தயாரித்தவர் பஞ்சு அருணாச்சலம். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக திகழ்ந்த பஞ்சு அருணாச்சலம், கடந்த சில நாட்களாகவே உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று பஞ்சு அருணாச்சலம் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. பஞ்சு அருணாச்சலத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பஞ்சு அருணாச்சலத்தின் மகன் சுப்பு பஞ்சு தற்போது சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions