மலையாளத்துக்கு செல்லும் பண்ணையாரும் பத்மினியும் இசையமைப்பாளர்!

Bookmark and Share

மலையாளத்துக்கு செல்லும் பண்ணையாரும் பத்மினியும் இசையமைப்பாளர்!

விஜயசேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும் படத்துக்கு இசையமைத்தவர் ஜஸ்டின் பிரபாகரன். அதையடுத்து மீண்டும் விஜயசேதுபதி நடித்து வரும் ஆரஞ்சு மிட்டாய் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் உள்குத்து, மெட்ராஸ் கலையரசன் நடிக்கும் படம் என தமிழில் சில படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.

இந்தநிலையில், மலையாளத்தில் நிவின் பாலி, இஷாதல்வார் நடிப்பில் வெளியான தட்டத்தின் மறையத்து படத்தை இயக்கிய வினீத் ஸ்ரீனிவாசன் தற்போது தயாரிக்கும் புதிய படத்துக்கு இசையமைக்க ஒபபந்தமாகியிருக்கிறார் ஜஸ்டின்.

அப்படம் பற்றி அவர் கூறுகையில், தமிழில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதை. அதோடு, அங்குள்ளவர்கள் சாப்ட்டான இசையைத்தான் கேட்பார்கள். நானும் மெலோடி இசையில் அதிக ஈடுபாடு கொண்டவன் என்பதால், அந்த படத்துக்கு என்னிடமிருந்து வித்தியாசமான இசையை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறேன் என்கிறார்.

மேலும், தமிழில் இதுவரை தான் இசையமைத்த படங்களில் மெலோடியான பாடல்களையே கொடுத்திருந்தபோதும், இப்போது உள்குத்து படத்தில் ஒரு அதிரடியான குததுப்பாடலை கம்போஸ் செய்திருப்பதாக சொல்லும் ஜஸ்டின் பிரபாகரன், அதன்பிறகு கமிட்டாகியிருக்கும் படங்களிலும் குததுப்பாட்டுக்கு இசையமைப்பதாக சொல்கிறார்.

அதோடு, குத்துப்பாடலைப் பொறுத்தவரை டியூன் மட்டுமின்றி, பாடலின் வார்த்தைகளும் முக்கியம். கேட்சிங்காக இருந்தால்தான் ஹிட்டாகும் என்பதால், பாடலாசிரியர்களிடம் வித்தியாசமான வார்த்தைகளை போட்டு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறாராம் ஜஸ்டின். 


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
நெடும் படமாகும் குறும்படம்
கேரளாவிற்கு செல்லும் ‘பண்ணையாரும் பத்மினியும்’
பெங்களூரு திரைப்பட விழாவில் விருது பெற்ற பண்ணையாரும் பத்மினியும்
பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ் படங்கள்
விஜயசேதுபதிக்கு பிடித்த பண்ணையாரும் பத்மினியும்!
கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் பங்கேற்பு
விஜய் சேதுபதியின் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு யு சான்றிதழ்..!
புதுயுகம் மூன்று கோடிக்கு‘பண்ணையாரும் பத்மினியும்’வாங்கியது..!
பண்ணையரின் பத்மினியாக விஜய் சேதுபதியுடன் இணையும் சினேகா.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions