கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் பங்கேற்பு

Bookmark and Share

கேரள சர்வதேச திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும் பங்கேற்பு

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் வரும் டிசம்பர் 12-ம் தேதியில் இருந்து 19-ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடைபெற உள்ளது. தொடர்ந்து 19-வது ஆண்டாக நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் உலக மொழிகளில் உருவாக்கப்பட்ட சிறந்த படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த வரிசையில் இடம்பெறும் இந்திய மொழிப் படங்களை தேர்வு செய்ய பிரபல சினிமா இயக்குனர்கள் லெனின் ராஜேந்திரன், கே.மதுபால், எம்.சி.நாராயணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட 55 படங்கள் இந்த தேர்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றில் இருந்து 7 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

3 இந்தி, 2 வங்காளம், ஒரு மராத்தி மற்றும் ஒரே தமிழ் படமாக பண்ணையாரும் பத்மினியும் ஆகியவை இந்த விழாவில் திரையிட தேர்வாகியுள்ளன.

அறிமுக டைரக்டரான எஸ்.யூ.அருண் குமாரின் இயக்கத்தில் 7-2-2014 அன்று வெளியான பண்ணையாரும் பத்மினியும் படத்தின் கதை, பண்ணையார் ஒருவருக்கும், அவர் வைத்திருக்கும் ‘ஃபியட் பத்மினி’ காருக்கும் இடையிலான உறவைச் சுற்றி பின்னப்பட்டிருந்தது என்பது, குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
மலையாளத்துக்கு செல்லும் பண்ணையாரும் பத்மினியும் இசையமைப்பாளர்!
கேரளாவிற்கு செல்லும் ‘பண்ணையாரும் பத்மினியும்’
பெங்களூரு திரைப்பட விழாவில் விருது பெற்ற பண்ணையாரும் பத்மினியும்
பெங்களூர் திரைப்பட விழாவில் தமிழ் படங்கள்
விஜயசேதுபதிக்கு பிடித்த பண்ணையாரும் பத்மினியும்!
விஜய் சேதுபதியின் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்திற்கு யு சான்றிதழ்..!
புதுயுகம் மூன்று கோடிக்கு‘பண்ணையாரும் பத்மினியும்’வாங்கியது..!
பண்ணையரின் பத்மினியாக விஜய் சேதுபதியுடன் இணையும் சினேகா.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions