பாபநாசம் - அசத்த வரும் ஆஷா சரத்

Bookmark and Share

பாபநாசம்  - அசத்த வரும் ஆஷா சரத்

ஆஷா சரத், சிறந்த பரத, மோகினியாட்ட, குச்சிப்புடி நடனக் கலைஞர். மலையாள த்ரிஷ்யம் படத்தில் ஏற்று நடித்த காவல் துறை அதிகாரி கதாபாத்திரத்தை, கன்னடம், தமிழ் என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யும் போதும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஒரே கதாபாத்திரத்தை மூன்று மொழிகளில் ஏற்று நடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது அவருடைய நடிப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். தமிழில் அந்தப் படம் பாபநாசம் என உருமாறும் போது ஆஷா சரத் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி, நதியா, தபு என பலர் நடிப்பதாகச் சொல்லப்பட்டது.

ஆனால், கமல்ஹாசன் மலையாளத்தில் நடித்த ஆஷா சரத்தே அதே கதாபாத்திரத்தில் நடிக்கட்டும் என்று சொல்லியிருக்கிறார். அதையே தனக்குக் கிடைத்த ஒரு விருதாகக் கருதியிருக்கிறார் ஆஷா சரத்.

இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது, “என்னுடை தோழிகள் தமிழ் பத்திரிகைகளில் இப்படி ஸ்ரீதேவி உட்பட பலர் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்கள் என்று சொல்லும் போது மிகவும் வருத்தமாக இருந்தது.

அதன் பின் கமல் சார் அவர்களே நானே நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறார். இப்போது அவருடைய  தூங்காவனம் படத்திலும் எனக்கு நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்,” என்று சொன்னார்.

அது குறித்து அவருடைய சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது, “கமல் சார் எனக்கு 'தூங்காவனம்' படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கொடுத்ததும் மிகவும் திரில் ஆக இருந்தது.

என் மீதும், என் திறமை மீதும் நம்பிக்கை வைத்ததற்கு நன்றி சார். என்னுடைய நண்பர்களுக்கும், நலம்விரும்பிகளுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி. அவர்கள்தான் எனக்கு எப்போதும் பலமாக இருந்திருக்கிறார்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

பாபநாசம் படத்தில் ஆஷா சரத் நடித்துள்ள போலீஸ் அதிகாரி கதாபாத்திரம் அவரை தமிழிலும் பேச வைக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்
ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!
பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!
விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்
நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!
ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions