பரபரப்பு இல்லாமல் வெளியான பாபாநாசம்

Bookmark and Share

பரபரப்பு இல்லாமல் வெளியான பாபாநாசம்

ஒரு முன்னணி நட்சத்திரத்தின் திரைப்படம் வெளியாகிறது என்றால் எப்படி இருக்க வேண்டும். தியேட்டர்கள் அப்படியே பரபரக்க வேண்டாமா ?.

ஆனால், அப்படி எதுவுமில்லாமல் எந்த பரபரப்போ, ஆர்பாட்டமோ இல்லாமல் மிகவும் அமைதியாக வெளியாகியிருக்கிறது கமல்ஹாசன் நடித்துள்ள பாபநாசம்.

இந்தப் படம் வழக்கமான ஆக்ஷன் படமோ, அல்லது பரபரப்பை ஏற்படுத்தும் படமோ அல்ல. ஒரு அழகான குடும்பக் கதை, அதனால் இந்தப் படத்திற்கு வழக்கமாக ரசிகர்கள் செய்யும் எந்த விதமான அமர்க்களமான ஆடம்பரமான பரபரப்பு எதுவும் தேவையில்லை என கமல்ஹாசன் சொன்னதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு புதுமுகத்தின் படம் வெளிவருவது போலத்தான் பாபநாசம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெளியாகியுள்ளது. ஒரு சில ரசிகர்கள் மட்டுமே ஏதோ பெயருக்கு நாங்களும் ஃபிளக்ஸ் வைக்கிறோம் என வாழ்த்துச் சொல்லி வைத்திருக்கிறார்கள். பொதுவாக கமல்ஹாசன் படம் என்றாலே ஏதாவது சர்ச்சையுடன் தான் வெளிவரும்.

அதுவே அந்தப் படத்திற்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். இந்தப் படத்திற்கும் சில காமெடி பீஸ்கள் பிரச்சனை ஏற்படுத்த முயன்றிருக்கின்றன. அதை கமல்ஹாசன் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து விட்டார். அதனால், அந்த தேவையற்ற சர்ச்சையும் தவிர்க்கப்பட்டுவிட்டது.

இதனிடையே, இன்று வெளியான படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்தினருடன் வந்து பார்க்கும்படியான கமல்ஹாசன் படமாக  பாபநாசம் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்
ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!
பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!
விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்
நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!
ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions