பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!

Bookmark and Share

பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!

படத்தின் தலைப்பு தமிழில் சூட்டப்பட்டிருக்க வேண்டும், யு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதுதான் விதி என்றாலும், எல்லாப்படங்களுக்கும் வரிவிலக்குக் கொடுக்கப்படுவதில்லை என்றும் விருப்பு வெறுப்பு அடிப்படையில்தான் வரிவிலக்கு வழங்கப்படுவதாக நீண்டகாலமாகவே குற்றச்சாட்டு உள்ளது.

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் வரிவிலக்கு விஷயத்தில் குளறுபடி நீடிக்கிறது.

கமல் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு வழங்கப்படவில்லை. என்ன காரணம்? பாபநாசம் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் உரிமையை தனியார் டிவி ஒன்றுக்கு விற்கப்பட்டிருப்பதால்தான் வரிவிலக்கு கிடைக்கவில்லை என்று திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது.


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்
ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!
விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்
நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!
ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்
வசூல் மழையில் பாபநாசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions