பாபநாசம் கமல்ஹாசனை கரை சேர்க்குமா ?

Bookmark and Share

பாபநாசம் கமல்ஹாசனை கரை சேர்க்குமா ?

கமல்ஹாசன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த உத்தம வில்லன் திரைப்படம் இப்படி ஒரு மோசனமான தோல்வியைத் தழுவும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 
இன்றைய கால கட்டக் கதையுடன், சரித்திரக் காலக் கதை ஒன்றையும் படத்தில் தேவையில்லாமல் சேர்த்து ரசிகர்களை குழப்பி, அட.. இது கமல்ஹாசன் படம்தான் என்று மட்டும் உணர வைத்து வசூலை அள்ளாமல் விட்டுவிட்டார்கள்.

இந்தப் படத்தைத் தயாரித்த காரணத்தால் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து தயாரித்து வரும் படங்களை வெளியிட முடியாமல் தவித்து வருகிறது. அதில் எப்போதோ படப்பிடிப்பு முடிவடைந்த இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட படமும் அடக்கம்.

இதனிடையே, கமல்ஹாசன், கௌதமி நடித்துள்ள பாபநாசம் படத்தின் இரண்டாவது டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. படத்தின் கதை என்னவாக இருக்கும் என்று யோசிக்க வைக்கும் ஒரு பரபரப்பான டிரைலராக அது அமைந்துள்ளது. 

இது போன்ற குடும்பக் கதைகளில் கமல்ஹாசன் நடித்து நீண்ட நாட்களாகிவிட்டது. பெண்கள் அனைவரும் டிவி சீரியல்களில் மூழ்கியுள்ள நிலையில் இது போன்ற படங்கள் அவர்களை தியேட்டர்கள் பக்கம் இழுத்துக் கொண்டு வர வாய்ப்பாக இருக்கும். படத்தின் டிரைலரைப் பார்த்தால் உறுத்தல் இல்லாத பல விஷயங்கள் இருக்கின்றன, ஆனால், கமல்ஹாசனின் ஒட்டு மீசையைத் தவிர...! 


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்
ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!
பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!
விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்
நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!
ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions