ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்

Bookmark and Share

ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்

ஒரு சில வருடங்களாக தமிழ் படத்தின் ஆயுள் என்பது மூன்று நாட்களாக சுருங்கிவிட்டது. ஒரு சில படங்களின் ஆயுள் மட்டும்ஓரு வாரம் என்பதாக இருந்த நிலையில் 50 , 100 நாட்கள் ஓடும் படங்கள் மிக அரிதாகிவிட்டன. முன்னணி நட்சத்திரங்கள் நடித்த சில படங்கள் 100 நாட்கள் ஓடுவதாக விளம்பரப்படுத்தப்படுகின்றன.

உண்மையில் அந்த ஹீரோவை குஷிப்படுத்தவும், அடுத்தபடத்துக்கு கால்ஷீட் வாங்கவும் தயாரிப்பாளர்களே வாடகை கட்டி ஓட்டுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில் கமல்ஹாசன், கௌதமி, ஆஷாசரத் நடிப்பில் மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசஃப் இயக்கத்தில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி ரிலீசான பாபநாசம் படம் உண்மையாகவே 50 ஆவது நாளைத்தொட்டிருக்கிறது. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டாகி மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த த்ரிஷ்யம் படத்தின் ரீ-மேக்கான இப்படம் கன்னடம், தெலுங்கு மொழிகளிலும் முன்பே ரீ-மேக்காகி வெற்றி பெற்றது.

தமிழிலும் பாபநாசம் இப்போது 50 ஆவது நாளை தொட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதை கண்டு, பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் படக்குழுவினர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடத்தை தொடர்ந்து ஹிந்தியிலும் இப்படம் திருஷியம் என்ற பெயரிலேயே ரீ-மேக்கானது. அஜய்தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் கடந்த மாதம் 31-ஆம் தேதி ரிலீசான இப்படம் ஹிந்தியிலும் வெற்றியடைந்துள்ளது. ஒரு படத்தின் கதை வெளிவந்த மொழிகளனைத்திலும் வெற்றிபெறும் சாதனை என்பது பெரும் பாராட்டிற்குரியது


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!
பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!
விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்
நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!
ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்
வசூல் மழையில் பாபநாசம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions