பாபநாசம் ஸ்டில் : மன்னிப்பு கேட்ட கமல்

Bookmark and Share

பாபநாசம் ஸ்டில் : மன்னிப்பு கேட்ட கமல்

பாபநாசம் படத்தி்ல், கமல், கவுதமி உள்ளிட்ட தனது குடும்பத்தினருடன் டூவீலரில் பயணிப்பது போன்ற காட்சியில், ஹெல்மெட் அணியாதது தொடர்பாக, கமலஹாசன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுள்ளார்.

மலையாளத்தில் பெரும்வெற்றி பெற்ற த்ரிஷ்யம்  படம், தமிழில், கமல், கவுதமி உள்ளிட்டோரின் நடிப்பில், "பாபநாசம்" என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ஒரு காட்சியில், கமல், கவுதமி, நிவேதா தாமஸ் மற்றும் எஸ்தர், டூவீலரில் செல்வது போன்று இருக்கும்.

பாபநாசம் படத்தின் ஸ்டில்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த குறிப்பிட்ட ஸ்டில்லை பார்த்த ரசிகர்கள், நற்விஷயங்கள் அனைத்திலும் முன்னுதாரணமாக  இருக்கும் கமல், இந்த காட்சியில், ஏன் ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்டவில்லை என்ற விவாதம் பூதாகரமாக பரவியது.

இந்த விவகாரத்திற்கு பதிலளிக்கும் விதமாக கமல் கூறியுள்ளதாவது, முன்னதாக, இதுதொடர்பாக, நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த காட்சி படமாக்கப்பட்டு பல நாள்கள் ஆகிவிட்டன என்று நான் கூறுவதை, என்னாலேயே ஏற்றுக்கொள்ள முடியாது.

இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும், ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை யாரும் சொல்லி தெரியக்கூடாது, அதற்கு நான் மட்டும் விதிவிலக்கு அல்ல. நானும் உங்களில் ஒருவனே. இனிமேல், இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறேன் என்று கமல் அதில் கூறியுள்ளார். 


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்
ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!
பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!
விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்
நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!
ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions