கமலுக்கு வசனம் சொல்லித்தந்த சுகாவின் சுகானுபவம்!

Bookmark and Share

கமலுக்கு வசனம் சொல்லித்தந்த சுகாவின் சுகானுபவம்!

கமலுக்கு எதையும் முறையாகக் கற்றுக் கொண்டே சினிமாவில் பயன்படுத்துவது பழக்கம். அபூர்வ ராகங்களில் சிறு காட்சியில் நடிப்பதற்கே மிருதங்கம் கற்றவர் இப்போது பாபநாசம் படத்தில் நடிப்பதற்கு நெல்லைத் தமிழை சிரத்தை எடுத்து கற்றுக் கொண்டு பேசியிருக்கிறார்.

அவருக்கு நெல்லைத்தமிழ் கற்றுக் கொடுத்து இருக்கிறார் சுகா. இவர் பாலுமகேந்திராவின் உதவியாளராக இருந்து சினிமா கற்று படித்துறை படம் மூலம் இயக்குநாரனவர்.

பாபநாசம் படத்துக்கு வசனம் ஜெயமோகன் அவருடன் இணைந்து சுகாவும் பணி புரிந்து இருக்கிறார். அந்த அனுபவம் பற்றி சுகா கூறும் போது... "எனக்கு கமல் சாரை சதிலீலாவதி படத்தில் பாலுமகேந்திரா அவர்களின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த போதே தெரியும். என் புத்தகங்களை அவர் வாசித்ததுண்டு, அது பற்றி என்னிடம் பேசியதுண்டு.

பாபநாசம் படம் தொடங்கிய இரண்டாவது நாள் என்னைக் கூப்பிட்டார்கள். ஜெயமோகன் தான் வசனம் எழுதினார், அவரும் என் நண்பர்தான். இருவரும் பரஸ்பரமாக எங்கள் எழுத்து பற்றி பேசுவதுண்டு என்றாலும் நானும் அவருடன் இணைந்ததில் அவருக்கு மகிழ்ச்சி, அப்பாடா நீங்கள் வந்ததில் மகிழ்ச்சி, எனக்கு நிம்மதி என் வேலை குறைந்து விட்டது என்று ஜெயமோகன் கூறினார்.

அவர் எழுதிய வசனங்களை உரிய உச்சரிப்பு ஏற்ற இறக்கங்களுடன் படப்பிடிப்பில் பேசவைப்பது என் வேலையாக இருந்தது. வசனங்கள் சிலவற்றை திருத்தங்கள் செய்ய வேண்டியும் இருந்தது. கமல் சார் எப்போதும் எதிலும் சமரசப்படாதவர்.

அவர் என்னிடம் பேசும்போது, நெல்லைத்தமிழ் பரிச்சயமில்லை எனக்கு சுத்தமாகத் தெரியாது என்றார். நெல்லை தமிழ் எனக்குப் புதியது நீங்கள் எப்படி வேண்டுமோ அப்படி சொல்லிக் கொடுங்கள் சரியாக வரும் வரை விடாதீர்கள் என்றார்.

அனைத்து வட்டார மொழியும் பேசியிருக்கும் அவருக்கு நெல்லைத்தமிழ் மட்டும் அமையவில்லை. தசாவதாரத்தில் கூட ஒரு சிறு பாத்திரத்தில் நாகர்கோவில் தமிழ் பேசியிருப்பார்.

இதில் நான் சொல்லிக் கொடுத்தபடி அருமையாக பேசி நடித்தார். நெல்லைத் தமிழில் ஒரு ரிதம் - ராகம் இருக்கும். அது சற்றுப் பிசகினாலும் மாறிவிடும். அதை எங்கும் எந்த பாத்திரமும் பேசும்போது பிசகி விடாதபடி, விலகிவிடாதபடி பார்த்துக் கொண்டேன்.

கமல் பேசும்போது நெல்லைத்தமிழ் விலகினால் மதுரைத் தமிழோ குமரித் தமிழோ தானே வரவேண்டும். ஆனால் அவருக்கு கோவைத்தமிழ் வந்தது.

இதில் அவருக்கும் ஆச்சரியம் எனக்கும் ஆச்சரியம், இதில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் நன்றாக நெல்லைத் தமிழ் பேசினார். டெல்லி கணேஷ் அவர் நெல்லைக்காரர் என்பதால் நன்றாகப் பேசினார். கௌதமியும் ஆர்வமுடன் கற்றுக் கொண்டு பேசி நடித்தார்.

படப்பிடிப்பில் 39 நாட்கள் டப்பிங்கில் 25 நாட்கள் நெல்லைத் தமிழோடு அனைவரும் வாழ்ந்தனர். முழு திருப்தி வரை விட வேண்டாம் என்று கூறியிருந்தார் அல்லவா? படப்பிடிப்பை விட டப்பிங்கில் அதிக கவனமாக இருந்தோம். கௌதமி சிறந்த முறையில் டப்பிங் பேச ஆர்வமுடன் இருந்தார். அவர் இருவர் படத்தில் மட்டும் தான் டப்பிங் குரல் கொடுத்தாராம்.

அதற்குப் பிறகு பாபநாசம் படத்துக்குத்தான் பேசியிருக்கிறார். ஏன் பேசவே இல்லை என்ற போது யாரும் ஆர்வம் காட்டவில்லை. நானும் அப்போது ஓய்வின்றி நடித்துக் கொண்டிருந்தேன் என்றார்.

இப்போது ஊடகங்களின் தாக்கத்தால் எல்லா வட்டார மொழிகளும் மாறியுள்ளன. நெல்லையின் வட்டார மொழியும் மாறியுள்ளது இருந்தாலும் அதன் அசல் தன்மையை மீட்டெடுக்கும் வகையில் மொழியும் வசனங்களும் இருக்கும்படி பணியாற்றி இருக்கிறோம் என்றவரிடம், தான் பணியாற்றியது பற்றி கமல் என்ன கூறினார் என்ற போது அவரது அடுத்த படமான தூங்காவனத்திலும் என்னை பணிபுரிய வைத்துள்ளதே எனக்குக் கிடைத்த நற்சான்றிதழ்" என்கிறார்.


Post your comment

Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்
ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!
பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!
விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்
நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!
ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions