கமலின் பாபநாசம் படத்திற்கு சிக்கல் : தயாரிப்பாளர்கள் புகார்

Bookmark and Share

கமலின் பாபநாசம் படத்திற்கு சிக்கல் : தயாரிப்பாளர்கள் புகார்

நடிகர் கமல்ஹாசன் - கவுதமி நடித்துள்ள, பாபநாசம் படம், ஜூலை, 3ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு தடை விதிக்கக் கோரி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில், சிறிய, பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் புகார் அளித்துள்ளனர்.

பெரிய பட்ஜெட் படங்களை, பொங்கல், தீபாவளி உட்பட, ஆண்டில், 10 விசேஷ நாட்களில் மட்டுமே, வெளியிட வேண்டும் என, தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்நிலையில், சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், குற்றங்கடிதல் உட்பட, ஐந்து படங்கள் ஜூலை, 3ம் தேதி வெளியாக உள்ளன.அன்றைய தினம், பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ள, கமலின், பாபநாசம் படம் வெளியிடப்பட்டால், சிறிய பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காது.

அதனால், கமல் படத்தை ஜூலை, 3ம் தேதி வெளியிட தடை விதிக்க வேண்டும். விஜயதசமி அல்லது விநாயகர் சதுர்த்தி தினத்தில், பாபநாசம் படத்தை வெளியிட வேண்டும் என, சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

 


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்
ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!
பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!
விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்
நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!
ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions